முகப்பு |
பரத்தை |
40. மருதம் |
நெடு நா ஒள் மணி கடி மனை இரட்ட, |
||
குரை இலைப் போகிய விரவு மணற் பந்தர், |
||
பெரும்பாண் காவல் பூண்டென, ஒரு சார், |
||
திருந்துஇழை மகளிர் விரிச்சி நிற்ப, |
||
5 |
வெறி உற விரிந்த அறுவை மெல் அணைப் |
|
புனிறு நாறு செவிலியொடு புதல்வன் துஞ்ச, |
||
ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈரணிப் |
||
பசு நெய் கூர்ந்த மென்மை யாக்கைச் |
||
சீர்கெழு மடந்தை ஈர்-இமை பொருந்த, |
||
10 |
நள்ளென் கங்குல், கள்வன் போல, |
|
அகன் துறை ஊரனும் வந்தனன்- |
||
சிறந்தோன் பெயரன் பிறந்தமாறே. |
உரை | |
தலைமகட்குப் பாங்கு ஆயினார் கேட்பப் பரத்தை சொல்லியது.-கோண்மா நெடுங்கோட்டனார்
|
100. மருதம் |
உள்ளுதொறும் நகுவேன்-தோழி!-வள்உகிர் |
||
மாரிக் கொக்கின் கூரல் அன்ன |
||
குண்டு நீர் ஆம்பல் தண் துறை ஊரன் |
||
தேம் கமழ் ஐம்பால் பற்றி, என் வயின் |
||
5 |
வான் கோல் எல் வளை வௌவிய பூசல் |
|
சினவிய முகத்து, 'சினவாது சென்று, நின் |
||
மனையோட்கு உரைப்பல்' என்றலின், முனை ஊர்ப் |
||
பல் ஆ நெடு நிரை வில்லின் ஒய்யும் |
||
தேர் வண் மலையன் முந்தை, பேர் இசைப் |
||
10 |
புலம் புரி வயிரியர் நலம் புரி முழவின் |
|
மண் ஆர் கண்ணின் அதிரும், |
||
நன்னர் ஆளன் நடுங்கு அஞர் நிலையே. |
உரை | |
பரத்தை, தலைவிக்குப்பாங்காயினார் கேட்ப, விறலிக்கு உடம்படச்சொல்லியது.-பரணர்
|
150. மருதம் |
நகை நன்கு உடையன்-பாண!-நும் பெருமகன்: |
||
'மிளை வலி சிதையக் களிறு பல பரப்பி, |
||
அரண் பல கடந்த முரண் கொள் தானை |
||
வழுதி, வாழிய பல! எனத் தொழுது, ஈண்டு |
||
5 |
மன் எயில் உடையோர் போல, அஃது யாம் |
|
என்னதும் பரியலோ இலம்' எனத் தண் நடைக் |
||
கலி மா கடைஇ வந்து, எம் சேரித் |
||
தாரும் கண்ணியும் காட்டி, ஒருமைய |
||
நெஞ்சம் கொண்டமை விடுமோ? அஞ்ச, |
||
10 |
கண்ணுடைச் சிறு கோல் பற்றிக் |
|
கதம் பெரிது உடையள், யாய்; அழுங்கலோ இலளே. |
உரை | |
தலைநின்று ஒழுகப்படா நின்ற பரத்தை தலைவனை நெருங்கிப் பாணற்கு உரைத்தது.-கடுவன் இளமள்ளனார்
|
176. குறிஞ்சி |
எம் நயந்து உறைவி ஆயின், யாம் நயந்து |
||
நல்கினம் விட்டது என்? நலத்தோன் அவ் வயின் |
||
சால்பின் அளித்தல் அறியாது, 'அவட்கு அவள் |
||
காதலள் என்னுமோ?' உரைத்திசின்-தோழி!- |
||
5 |
நிரைத்த யானை முகத்து வரி கடுப்பப் |
|
போது பொதி உடைந்த ஒண் செங் காந்தள் |
||
வாழை அம் சிலம்பின் வம்பு படக் குவைஇ, |
||
யாழ் ஓர்த்தன்ன இன் குரல் இன வண்டு, |
||
அருவி முழவின் பாடொடு ஒராங்கு, |
||
10 |
மென்மெல இசைக்கும் சாரல், |
|
குன்ற வேலித் தம் உறைவின் ஊரே. |
உரை | |
பரத்தை தலைவியின் பாங்கிக்குப் பாங்காயினார் கேட்ப, விறலிக்குச் சொல்லியது.
|
216. மருதம் |
துனி தீர் கூட்டமொடு துன்னார் ஆயினும், |
||
இனிதே, காணுநர்க் காண்புழி வாழ்தல்; |
||
கண்ணுறு விழுமம் கை போல் உதவி, |
||
நம் உறு துயரம் களையார்ஆயினும், |
||
5 |
இன்னாதுஅன்றே, அவர் இல் ஊரே; |
|
எரி மருள் வேங்கைக் கடவுள் காக்கும் |
||
குருகு ஆர் கழனியின் இதணத்து ஆங்கண், |
||
ஏதிலாளன் கவலை கவற்ற, |
||
ஒரு முலை அறுத்த திருமாவுண்ணிக் |
||
10 |
கேட்டோர் அனையராயினும், |
|
வேட்டோர் அல்லது, பிறர் இன்னாரே. |
உரை | |
தலைமகட்குப் பாங்காயினார் கேட்பத் தலைமகன் தலைநின்று ஒழுகப் படாநின்ற பரத்தை, பாணற்குஆயினும் விறலிக்குஆயினும் சொல்லுவாளாய், நெருங்கிச் சொல்லியது.-மதுரை மருதன் இளநாகனார்
|
290. மருதம் |
வயல் வெள் ஆம்பல் சூடு தரு புதுப் பூக் |
||
கன்றுடைப் புனிற்றா தின்ற மிச்சில் |
||
ஓய்நடை முது பகடு ஆரும் ஊரன் |
||
தொடர்பு நீ வெஃகினை ஆயின், என் சொல் |
||
5 |
கொள்ளல்மாதோ, முள் எயிற்றோயே! |
|
நீயே பெரு நலத்தையே; அவனே, |
||
'நெடு நீர்ப் பொய்கை நடு நாள் எய்தி, |
||
தண் கமழ் புது மலர் ஊதும் |
||
வண்டு' என மொழிப; 'மகன்' என்னாரே. |
உரை | |
பரத்தை விறலிமேல் வைத்துத் தலைமகளை நெருங்கிச் சொல்லியது; பரத்தையிற்பிரிய, வாயிலாய்ப் புக்க பாணன் கேட்ப, தோழி சொல்லியதூஉம் ஆம்.-மதுரை மருதன் இளநாகனார்
|
310. மருதம் |
விளக்கின் அன்ன சுடர் விடு தாமரை, |
||
களிற்றுச் செவி அன்ன பாசடை தயங்க, |
||
உண்துறை மகளிர் இரிய, குண்டு நீர் |
||
வாளை பிறழும் ஊரற்கு, நாளை |
||
5 |
மகட் கொடை எதிர்ந்த மடம் கெழு பெண்டே! |
|
தொலைந்த நாவின் உலைந்த குறு மொழி |
||
உடன்பட்டு, ஓராத் தாயரொடு ஒழிபுடன் |
||
சொல்லலைகொல்லோ நீயே-வல்லை, |
||
களிறு பெறு வல்சிப் பாணன் கையதை |
||
10 |
வள் உயிர்த் தண்ணுமை போல, |
|
உள் யாதும் இல்லது ஓர் போர்வைஅம் சொல்லே? |
உரை | |
வாயிலாகப் புக்க விறலியைத் தோழி சொல்லியது; விறலியை எதிர்ப்பட்ட பரத்தை சொல்லியதூஉம் ஆம்.-பரணர்
|
315. நெய்தல் |
ஈண்டு பெருந் தெய்வத்து-யாண்டு பல கழிந்தென, |
||
பார்த் துறைப் புணரி அலைத்தலின், புடை கொண்டு, |
||
மூத்து, வினை போகிய முரி வாய் அம்பி, |
||
நல் எருது நடை வளம் வைத்தென, உழவர் |
||
5 |
புல்லுடைக் காவில் தொழில் விட்டாங்கு, |
|
நறு விரை நன் புகை கொடாஅர், சிறு வீ |
||
ஞாழலொடு கெழீஇய புன்னை அம் கொழு நிழல் |
||
முழவு முதற் பிணிக்கும் துறைவ! நன்றும் |
||
விழுமிதின் கொண்ட கேண்மை நொவ்விதின் |
||
10 |
தவறும்; நன்கு அறியாய்ஆயின், எம் போல், |
|
ஞெகிழ் தோள், கலுழ்ந்த கண்ணர், |
||
மலர் தீய்ந்தனையர், நின் நயந்தோரே. |
உரை | |
தலைமகனைப் பரத்தை நொந்து சொல்லியது.- அம்மூவனார்
|
320. மருதம் |
'விழவும் மூழ்த்தன்று; முழவும் தூங்கின்று; |
||
எவன் குறித்தனள்கொல்?' என்றி ஆயின்- |
||
தழை அணிந்து அலமரும் அல்குல், தெருவின், |
||
இளையோள் இறந்த அனைத்தற்கு, பழ விறல் |
||
5 |
ஓரிக் கொன்ற ஒரு பெருந் தெருவில், |
|
காரி புக்க நேரார் புலம்போல், |
||
கல்லென்றன்றால், ஊரே; அதற்கொண்டு, |
||
காவல் செறிய மாட்டி, ஆய்தொடி |
||
எழில் மா மேனி மகளிர் |
||
10 |
விழுமாந்தனர், தம் கொழுநரைக் காத்தே. |
உரை |
பரத்தை தனக்குப் பாங்காயினார் கேட்ப, நெருங்கிச் சொல்லியது.-கபிலர்
|
400. மருதம் |
வாழை மென் தோடு வார்புஉறுபு ஊக்கும் |
||
நெல் விளை கழனி நேர் கண் செறுவின், |
||
அரிவனர் இட்ட சூட்டு அயல், பெரிய |
||
இருஞ் சுவல் வாளை பிறழும் ஊர! |
||
5 |
நினின்று அமைகுவென்ஆயின், இவண் நின்று, |
|
இன்னா நோக்கமொடு எவன் பிழைப்பு உண்டோ? |
||
மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து, |
||
அறம் கெட அறியாதாங்கு, சிறந்த |
||
கேண்மையொடு அளைஇ, நீயே |
||
10 |
கெடு அறியாய் என் நெஞ்சத்தானே. |
உரை |
பரத்தை தலைவனைப் புகழ்ந்தது. முன்பு நின்று யாதோ புகழ்ந்தவாறு எனின், 'நின் இன்று அமையாம்' என்று சொன்னமையான் என்பது.-ஆலங்குடி வங்கனார்
|