முகப்பு |
ஞாழல் |
74. நெய்தல் |
வடிக் கதிர் திரித்த வல் ஞாண்பெரு வலை |
||
இடிக் குரற் புணரிப் பௌவத்து இடுமார், |
||
நிறையப் பெய்த அம்பி, காழோர் |
||
சிறை அருங் களிற்றின், பரதவர் ஒய்யும் |
||
5 |
சிறு வீ ஞாழற் பெருங் கடற் சேர்ப்பனை, |
|
'ஏதிலாளனும்' என்ப; போது அவிழ் |
||
புது மணற் கானல் புன்னை நுண் தாது, |
||
கொண்டல் அசை வளி தூக்குதொறும், குருகின் |
||
வெண் புறம் மொசிய வார்க்கும், தெண் கடல் |
||
10 |
கண்டல் வேலிய ஊர், 'அவன் |
|
பெண்டு' என அறிந்தன்று; பெயர்த்தலோ அரிதே! | உரை | |
தலைவி பாணற்கு வாயில்மறுத்தது.-உலோச்சனார்
|
96. நெய்தல் |
'இதுவே, நறு வீ ஞாழல் மா மலர்தாஅய், |
||
புன்னை ததைந்த வெண் மணல் ஒரு சிறை, |
||
புதுவது புணர்ந்த பொழிலே; உதுவே, |
||
பொம்மற் படு திரை நம்மோடு ஆடி, |
||
5 |
புறம் தாழ்பு இருளிய பிறங்குகுரல் ஐம்பால் |
|
துவரினர் அருளிய துறையே; அதுவே, |
||
கொடுங் கழி நிவந்த நெடுங் கால் நெய்தல் |
||
அம் பகை நெறித் தழை அணி பெறத் தைஇ, |
||
தமியர் சென்ற கானல்' என்று ஆங்கு |
||
10 |
உள்ளுதோறு உள்ளுதோறு உருகி, |
|
பைஇப் பையப் பசந்தனை பசப்பே. | உரை | |
சிறைப்புறமாகத்தோழி தலைவிக்கு உரைப்பாளாய் வரைவு கடாயது.-கோக்குளமுற்றனார்
|
106. நெய்தல் |
அறிதலும் அறிதியோ-பாக!-பெருங்கடல் |
||
எறி திரை கொழீஇய எக்கர் வெறி கொள, |
||
ஆடு வரி அலவன் ஓடுவயின் ஆற்றாது, |
||
அசைஇ, உள் ஒழிந்த வசை தீர் குறுமகட்கு |
||
5 |
உயவினென் சென்று, யான், உள் நோய் உரைப்ப, |
|
மறுமொழி பெயர்த்தல் ஆற்றாள், நறு மலர் |
||
ஞாழல் அம் சினைத் தாழ்இணர் கொழுதி, |
||
முறி திமிர்ந்து உதிர்த்த கையள், |
||
அறிவு அஞர் உறுவி ஆய் மட நிலையே? | உரை | |
பருவ வரவின்கண் பண்டு நிகழ்ந்ததோர் குறிப்பு உணர்ந்த தலைவன், அதனைக் கண்டு தாங்ககில்லானாய் மீள்கின்றான், தேர்ப்பாகற்குச்சொல்லியது.-தொண்டைமான் இளந்திரையன்
|
167. நெய்தல் |
கருங் கோட்டுப் புன்னைக் குடக்கு வாங்கு பெருஞ் சினை |
||
விருந்தின் வெண் குருகு ஆர்ப்பின், ஆஅய் |
||
வண் மகிழ் நாளவைப் பரிசில் பெற்ற |
||
பண் அமை நெடுந் தேர்ப் பாணியின், ஒலிக்கும் |
||
5 |
தண்ணம் துறைவன் தூதொடும் வந்த |
|
பயன் தெரி பனுவற் பை தீர் பாண! |
||
நின் வாய்ப் பணி மொழி களையா-பல் மாண் |
||
புது வீ ஞாழலொடு புன்னை தாஅம் |
||
மணம் கமழ் கானல், மாண் நலம் இழந்த |
||
10 |
இறை ஏர் எல் வளைக் குறுமகள் |
|
பிறை ஏர் திரு நுதல் பாஅய பசப்பே. | உரை | |
தோழி பாணற்கு வாயில் மறுத்தது; தூதொடு வந்த பாணற்குச் சொல்லியதூஉம் ஆம்.
|
191. நெய்தல் |
'சிறு வீ ஞாழல் தேன் தோய் ஒள் இணர் |
||
நேர் இழை மகளிர் வார் மணல் இழைத்த |
||
வண்டற் பாவை வன முலை முற்றத்து, |
||
ஒண் பொறிச் சுணங்கின் ஐது படத் தாஅம் |
||
5 |
கண்டல் வேலிக் காமர் சிறுகுடி, |
|
எல்லி வந்தன்றோ தேர்?' எனச் சொல்லி, |
||
அலர் எழுந்தன்று இவ் ஊரே; பலருளும் |
||
என் நோக்கினளே அன்னை; நாளை |
||
மணிப் பூ முண்டகம் கொய்யேன் ஆயின், |
||
10 |
அணிக் கவின் உண்மையோ அரிதே; மணிக் கழி |
|
நறும் பூங் கானல் வந்து, அவர் |
||
வறுந் தேர் போதல் அதனினும் அரிதே. | உரை | |
தோழி, தலைமகன் சிறைப்புறமாக, செறிப்பு அறிவுறுப்பான் வேண்டிச் சொல்லியது.-உலோச்சனார்
|
267. நெய்தல் |
'நொச்சி மா அரும்பு அன்ன கண்ண |
||
எக்கர் ஞெண்டின் இருங் கிளைத் தொழுதி, |
||
இலங்கு எயிற்று ஏஎர் இன் நகை மகளிர் |
||
உணங்கு தினை துழவும் கை போல், ஞாழல் |
||
5 |
மணம் கமழ் நறு வீ வரிக்கும் துறைவன்- |
|
தன்னொடு புணர்த்த இன் அமர் கானல், |
||
தனியே வருதல் நனி புலம்பு உடைத்து' என, |
||
வாரேன்மன் யான், வந்தனென் தெய்ய; |
||
சிறு நா ஒண் மணித் தெள் இசை கடுப்ப, |
||
10 |
இன மீன் ஆர்கை ஈண்டு புள் ஒலிக்குரல், |
|
'இவை மகன்' என்னா அளவை, |
||
வய மான் தோன்றல் வந்து நின்றனனே. | உரை | |
தோழி காப்புக் கைமிக்குக் காமம் பெருகிய காலத்துச் சிறைப்புறமாகச் சொல்லியது;வரைவு கடாயதூஉம் ஆம்.-கபிலர்
|