முகப்பு |
எருமை |
60. மருதம் |
மலை கண்டன்ன நிலை புணர்நிவப்பின் |
||
பெரு நெற் பல் கூட்டு எருமை உழவ! |
||
கண்படை பெறாஅது, தண் புலர் விடியல், |
||
கருங் கண் வராஅல் பெருந் தடி மிளிர்வையொடு |
||
5 |
புகர்வை அரிசிப் பொம்மற் பெருஞ் சோறு |
|
கவர் படு கையை கழும மாந்தி, |
||
நீர் உறு செறுவின் நாறு முடி அழுத்த, நின் |
||
நடுநரொடு சேறிஆயின், அவண் |
||
சாயும் நெய்தலும் ஓம்புமதி; எம்மில் |
||
10 |
மா இருங் கூந்தல் மடந்தை |
|
ஆய் வளை கூட்டும் அணியுமார் அவையே. | உரை | |
சிறைப்புறமாக உழவர்க்குச் சொல்லுவாளாய்த் தோழி செறிப்பு அறிவுறீஇயது.-தூங்கலோரியார்
|
80. மருதம் |
'மன்ற எருமை மலர் தலைக் காரான் |
||
இன் தீம் பாற்பயம் கொண்மார், கன்று விட்டு, |
||
ஊர்க் குறுமாக்கள் மேற்கொண்டு கழியும் |
||
பெரும் புலர் விடியலின் விரும்பிப் போத்தந்து, |
||
5 |
தழையும் தாரும் தந்தனன், இவன்' என, |
|
இழை அணி ஆயமொடு தகு நாண் தடைஇ, |
||
தைஇத் திங்கள் தண் கயம் படியும் |
||
பெருந் தோட் குறுமகள் அல்லது, |
||
மருந்து பிறிது இல்லை, யான் உற்ற நோய்க்கே. | உரை | |
சேட்படுக்கப்பட்டு ஆற்றானாய தலைவன், தோழி கேட்ப, தன் நெஞ்சிற்கு உரைத்தது.-பூதன்தேவனார்
|
120. மருதம் |
தட மருப்பு எருமை மட நடைக் குழவி |
||
தூண் தொறும் யாத்த காண்தகு நல் இல், |
||
கொடுங் குழை பெய்த செழுஞ் செய் பேதை |
||
சிறு தாழ் செறித்த மெல் விரல் சேப்ப, |
||
5 |
வாளை ஈர்ந் தடி வல்லிதின் வகைஇ, |
|
புகை உண்டு அமர்த்த கண்ணள், தகை பெறப் |
||
பிறை நுதல் பொறித்த சிறு நுண் பல் வியர் |
||
அம் துகில் தலையில் துடையினள், நப் புலந்து, |
||
அட்டிலோளே அம் மா அரிவை- |
||
10 |
எமக்கே வருகதில் விருந்தே! சிவப்பாள் அன்று, |
|
சிறு முள் எயிறு தோன்ற |
||
முறுவல் கொண்ட முகம் காண்கம்மே. | உரை | |
விருந்து வாயிலாகப்புக்க தலைவன் சொல்லியது.-மாங்குடி கிழார்
|
260. மருதம் |
கழுநீர் மேய்ந்த கருந் தாள் எருமை |
||
பழனத் தாமரைப் பனிமலர் முணைஇ, |
||
தண்டு சேர் மள்ளரின் இயலி, அயலது |
||
குன்று சேர் வெண் மணல் துஞ்சும் ஊர! |
||
5 |
வெய்யை போல முயங்குதி: முனை எழத் |
|
தெவ்வர்த் தேய்த்த செவ் வேல் வயவன் |
||
மலி புனல் வாயில் இருப்பை அன்ன, என் |
||
ஒலி பல் கூந்தல் நலம் பெறப் புனைந்த |
||
முகை அவிழ் கோதை வாட்டிய |
||
10 |
பகைவன்மன்? யான் மறந்து அமைகலனே! | உரை |
ஊடல் மறுத்த தலைமகள் சொல்லியது.-பரணர்
|
271. பாலை |
இரும் புனிற்று எருமைப் பெருஞ் செவிக் குழவி |
||
பைந் தாது எருவின் வைகு துயில் மடியும் |
||
செழுந் தண் மனையோடு எம் இவண் ஒழிய, |
||
செல் பெருங் காளை பொய்ம் மருண்டு, சேய் நாட்டுச் |
||
5 |
சுவைக் காய் நெல்லிப் போக்கு அரும் பொங்கர் |
|
வீழ் கடைத் திரள் காய் ஒருங்குடன் தின்று, |
||
வீ சுனைச் சிறு நீர் குடியினள், கழிந்த |
||
குவளை உண்கண் என் மகள் ஓரன்ன, |
||
செய் போழ் வெட்டிய பொய்தல் ஆயம், |
||
10 |
மாலை விரி நிலவில் பெயர்பு புறங்காண்டற்கு, |
|
மா இருந் தாழி கவிப்ப, |
||
தா இன்று கழிக, எற் கொள்ளாக் கூற்றே. | உரை | |
மனை மருண்டு சொல்லியது.
|
330. மருதம் |
தட மருப்பு எருமைப் பிணர்ச் சுவல் இரும் போத்து, |
||
மட நடை நாரைப் பல் இனம் இரிய, |
||
நெடு நீர்த் தண் கயம் துடுமெனப் பாய்ந்து, |
||
நாட் தொழில் வருத்தம் வீட, சேண் சினை |
||
5 |
இருள் புனை மருதின் இன் நிழல் வதியும் |
|
யாணர் ஊர! நின் மாண் இழை மகளிரை |
||
எம் மனைத் தந்து நீ தழீஇயினும், அவர்தம் |
||
புன் மனத்து உண்மையோ அரிதே: அவரும், |
||
பைந் தொடி மகளிரொடு சிறுவர்ப் பயந்து, |
||
10 |
நன்றி சான்ற கற்பொடு |
|
எம் பாடு ஆதல் அதனினும் அரிதே. | உரை | |
தோழி, தலைமகனை வாயில் மறுத்தது.-ஆலங்குடி வங்கனார்
|