முகப்பு |
நாய் (செந்நாய், ஞமலி) |
43. பாலை |
துகில் விரித்தன்ன வெயில் அவிர்உருப்பின் |
||
என்றூழ் நீடிய குன்றத்துக் கவாஅன், |
||
ஓய்பசிச் செந்நாய் உயங்குமரை தொலைச்சி |
||
ஆர்ந்தன ஒழிந்த மிச்சில் சேய் நாட்டு |
||
5 |
அருஞ் சுரம் செல்வோர்க்கு வல்சி ஆகும் |
|
வெம்மை ஆர் இடை இறத்தல் நுமக்கே |
||
மெய்ம் மலி உவகை ஆகின்று; இவட்கே, |
||
அஞ்சல் என்ற இறை கைவிட்டென, |
||
பைங் கண் யானை வேந்து புறத்து இறுத்தலின், |
||
10 |
களையுநர்க் காணாது கலங்கிய உடை மதில் |
|
ஓர் எயின் மன்னன் போல, |
||
அழிவு வந்தன்றால், ஒழிதல் கேட்டே. | உரை | |
பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைவனைச் செலவு அழுங்குவித்தது.-எயினந்தையார்
|
82. குறிஞ்சி |
நோயும் நெகிழ்ச்சியும் வீடச்சிறந்த |
||
வேய் வனப்புற்ற தோளை நீயே, |
||
என் உயவு அறிதியோ, நல் நடைக் கொடிச்சி! |
||
முருகு புணர்ந்து இயன்ற வள்ளி போல, நின் |
||
5 |
உருவு கண் எறிப்ப நோக்கல் ஆற்றலெனே- |
|
போகிய நாகப் போக்கு அருங் கவலை, |
||
சிறு கட் பன்றிப் பெருஞ் சின ஒருத்தல் |
||
சேறு ஆடு இரும் புறம் நீறொடு சிவண, |
||
வெள் வசிப் படீஇயர், மொய்த்த வள்பு அழீஇ, |
||
10 |
கோள் நாய் கொண்ட கொள்ளைக் |
|
கானவர் பெயர்க்கும் சிறுகுடியானே. | உரை | |
தோழியிற்புணர்ச்சிக்கண் தன்னிலைக் கொளீஇயது.-அம்மூவனார்
|
103. பாலை |
ஒன்று தெரிந்து உரைத்திசின்-நெஞ்சே! புன் கால் |
||
சிறியிலை வேம்பின் பெரிய கொன்று, |
||
கடாஅம் செருக்கிய கடுஞ் சின முன்பின் |
||
களிறு நின்று இறந்த நீர் அல் ஈரத்து, |
||
5 |
பால் அவி தோல் முலை அகடு நிலம் சேர்த்திப் |
|
பசி அட முடங்கிய பைங் கட் செந்நாய் |
||
மாயா வேட்டம் போகிய கணவன் |
||
பொய்யா மரபின் பிணவு நினைந்து இரங்கும் |
||
விருந்தின் வெங் காட்டு வருந்துதும் யாமே; |
||
10 |
ஆள்வினைக்கு அகல்வாம் எனினும், |
|
மீள்வாம் எனினும், நீ துணிந்ததுவே. | உரை | |
பொருள்வயிற்பிரிந்த தலைவன் இடைச்சுரத்து ஆற்றாதாகிய நெஞ்சினைக்கழறியது.-மருதன் இள நாகனார்
|
276. குறிஞ்சி |
'கோடு துவையா, கோள் வாய் நாயொடு |
||
காடு தேர்ந்து அசைஇய வய மான் வேட்டு |
||
வயவர் மகளிர்' என்றிஆயின், |
||
குறவர் மகளிரேம்; குன்று கெழு கொடிச்சியேம்; |
||
5 |
சேணோன் இழைத்த நெடுங் காற் கழுதில் |
|
கான மஞ்ஞை கட்சி சேக்கும் |
||
கல் அகத்தது எம் ஊரே; செல்லாது |
||
சேந்தனை, சென்மதி நீயே-பெரு மலை |
||
வாங்கு அமைப் பழுனிய நறவு உண்டு, |
||
10 |
வேங்கை முன்றில் குரவையும் கண்டே. | உரை |
பகற்குறி வந்து பெயரும் தலைமகனை உலகியல் சொல்லியது.-தொல் கபிலர்
|
285. குறிஞ்சி |
அரவு இரை தேரும் ஆர் இருள் நடு நாள் |
||
இரவின் வருதல் அன்றியும்-உரவுக் கணை |
||
வன் கைக் கானவன் வெஞ் சிலை வணக்கி, |
||
உளமிசைத் தவிர்த்த முளவுமான் ஏற்றையொடு, |
||
5 |
மனைவாய் ஞமலி ஒருங்கு புடை ஆட, |
|
வேட்டு வலம் படுத்த உவகையன், காட்ட |
||
நடு காற் குரம்பைத் தன் குடிவயிற் பெயரும் |
||
குன்ற நாடன் கேண்மை நமக்கே |
||
நன்றால் வாழி-தோழி!-என்றும், |
||
10 |
அயலோர் அம்பலின் அகலான், |
|
பகலின் வரூஉம், எறி புனத்தானே. | உரை | |
தோழி சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய், தலைமகன் கேட்ப, 'அம்ப லும் அலரும் ஆயிற்று' என்று சொல்லியது.- மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்
|