தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆசிரியர் பட்டயப் பயிற்சியின் பாடத்திட்டம்

தமிழ் இணையக் கல்விக்கழகம், அயல்நாடுகளில் தமிழ்மொழி கற்பிக்க விழைபவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் ஆசிரியர் பட்டயப் பயிற்சி வழங்க முன்வந்துள்ளது. இப்பயிற்சி ஓராண்டுக்குரியது. இப்பயிற்சிக்காகப் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழை இரண்டாம் மொழியாகக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்குத் தமிழின் இயல்பு, அதன் இலக்கிய, இலக்கண வளம், கற்பித்தல் நுட்பங்கள் முதலான இன்றியமையாத கூறுகள் இப்பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

ஆசிரியர் பட்டயப் பயிற்சி - பாடத்திட்டம்

தாள்
பாடப்பொருள்
கால அளவு
மதிப்பெண்கள்
1
தமிழ்மொழி கற்றல்-கற்பித்தல்
12 வாரம்
100
2
அடிப்படைத் தமிழ் இலக்கணம்
12 வாரம்
100
தேர்வு
முதல் பருவம்
2 வாரம்
3
தமிழில் படைப்பாற்றல் திறன்
12 வாரம்
100
4
செய்முறைப் பயிற்சிகள்
12 வாரம்
100
தேர்வு
இரண்டாம் பருவம்
2 வாரம்
மொத்தம்
52 வாரம்
400
காலஅளவு

ஆசிரியர் பட்டயப் பயிற்சியானது ஓராண்டு நடைபெறும். இரண்டு பருவங்களாக அமையும். முதல் பருவத்தேர்வில் தாள் – 1 & 2 இடம்பெறும். இரண்டாம் பருவத்தேர்வில் தாள் – 3 & 4 இடம்பெறும்.

கால அளவு
பருவம்
தாள்
வாரம்/மணி
ஓராண்டு
முதல் பருவம்
தாள்–1 தமிழ் கற்றல், கற்பித்தல்
12 வாரம் (90 நாள் • 1 மணி = 90 மணிநேரம்)
தாள்–2 அடிப்படைத் தமிழ் இலக்கணம்
12 வாரம் (90 நாள் • 1 மணி = 90 மணிநேரம்)
முதல் பருவத்தேர்வு
2 வாரம்
இரண்டாம் பருவம்
தாள் – 3 தமிழில் படைப்பாற்றல் திறன்
12 வாரம் (90 நாள் • 1 மணி = 90 மணிநேரம்)
தாள் – 4 செய்முறைப் பயிற்சி
12 வாரம்(90 நாள் • 1 மணி = 90 மணிநேரம்)
இரண்டாம் பருவத்தேர்வு
2 வாரம்
மொத்தம்
52 வாரம்/360 மணிநேரம்
தாள் – 1
தமிழ் கற்றல்-கற்பித்தல்

தமிழ் கற்பிக்க விரும்பும் ஆசிரியர்கள், தமிழின் இன்றியமையாத கூறுகளை அறிந்துகொண்டால் சிறப்பாகக் கற்பிக்கலாம் என்ற அடிப்படையில், இந்த முதல் தாளுக்குரிய பாடப்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தாள் 5 அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் அலகிலும் தமிழ் கற்பித்தலின் அடிப்படை நிலையில் அறிந்துகொள்ள வேண்டிய உட்கூறுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் தமிழாசிரியர்கள் திறம்பட கற்பிக்க இயலும்.

தாள் – 1 தமிழ் கற்றல்-கற்பித்தல்
அலகு – 1 தமிழ் கற்றல் – கற்பித்தல் ஓர் பார்வை
அலகு – 2 குழந்தை உளவியலும் கல்வி உளவியலும்
அலகு – 3 மொழி திறன்கள்
அலகு – 4 பாடப்பொருளும் கற்பித்தல் அணுகுமுறைகளும்
அலகு – 5 தேர்வும் மதிப்பீடும்
அலகு – 1
தமிழ் கற்றல் – கற்பித்தல் ஓர் பார்வை
1.1
கலைத்திட்டத்தில் தமிழ்மொழி பெறுமிடம்
1.2
மொழியின் பன்முக வளர்ச்சி
1.3
இரண்டாம் மொழியாகத் தமிழ் கற்பித்தல்
1.4
வகுப்பறைச் சூழலும் மொழியைக் கையாளுதலும்
1.5
மொழியாசிரியருக்குரிய பண்பு நலன்கள்
அலகு – 2
குழந்தை உளவியலும் கல்வி உளவியலும்
2.1
வளர்ச்சியும் மேம்பாடும்
2.2
மொழி கற்பித்தலில் உளவியல் கோட்பாடுகள்
2.3
குழந்தையும் மொழித்திறனும்
2.4
உள்ளடங்கிய கல்வியும் கற்பித்தல் முறைகளும்
2.5
குழந்தையும் வாழ்வியல் திறன்களும்
அலகு – 3
மொழி திறன்கள்
3.1
கேட்டல் திறன்
3.2
பேசுதல் திறன்
3.3
படித்தல் திறன்
3.4
எழுதுதல் திறன்
3.5
மொழிபெயர்ப்பும் மொழியாக்கமும்
அலகு – 4
பாடப்பொருளும் கற்பித்தல் அணுகுமுறைகளும்
4.1
கற்பித்தல் முறைகள்
4.2
கற்பித்தலுக்கான பழகு செயல்கள்
4.3
தமிழ் மொழி வடிவங்கள்
4.4
புளுமின் வகைமையும் பாடம் கற்பிப்புத்திட்டமும்
4.5
தமிழ் கற்பித்தலில் இக்கால நுட்பவியல்
அலகு – 5
தேர்வும் மதிப்பீடும்
5.1
தேர்வு முறைகளும் வகைகளும்
5.2
தேர்வு வினாக்களின் வகை
5.3
மொழிப்பாடங்களுக்கான சிறப்புத் தேர்வு வினாக்கள்
5.4
தேர்வுத்தாள் திட்டவரைவு
5.5
உணர்வுக் களத்தை மதிப்பிடுதல்
தாள் – 2
அடிப்படைத் தமிழ் இலக்கணம்

மொழியை முறையாகக் கற்பதற்கு இலக்கணம் பயன்படுகிறது. மொழியைத் திருத்தமாகப் பேசவும் எழுதவும் இலக்கணம் உதவுகிறது. ஒரு மொழியின் இலக்கணம் அம்மொழிக்கு அரணாக விளங்குகிறது. தமிழ் கற்பிக்கும் ஆசிரியர் அவற்றைப் பற்றிய பொதுவான அறிவு பெற்றிருக்க வேண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனவே, ஆசிரியர் பட்டயப் படிப்புக்கான இரண்டாவது தாள் “அடிப்படைத் தமிழ் இலக்கணம்” என்று அமைகிறது.

தாள் – 2 அடிப்படைத் தமிழ் இலக்கணம்
அலகு – 1 எழுத்து வடிவமும் ஒலிப்பு முறையும்
அலகு – 2 தமிழ்ச் சொற்களின் அமைப்பும் வகையும்
அலகு – 3 இலக்கியப் பாடுப்பொருள்
அலகு – 4 பயன்பாட்டு இலக்கணம்
அலகு – 5 மொழி கற்றல் வளமூலங்கள்
அலகு – 1
எழுத்து வடிவமும் ஒலிப்பு முறையும்
1.1
தமிழ் எழுத்துகளின் தோற்றம்
1.2
தமிழ் எழுத்துகளின் வகை
1.3
எழுத்துகளின் பிறப்பும் ஒலிப்புமுறைகளும்
1.4
மொழி முதல், இடை, இறுதி எழுத்துகள்
1.5
கிரந்த எழுத்துகள்
அலகு – 2
தமிழ்ச் சொற்களின் அமைப்பும் வகையும்
2.1
நால்வகைச் சொற்கள்
2.2
வேற்றுமை உருபுகள்
2.3
பதம் வகைகள் (பகுபதம், பகாப்பதம்)
2.4
தொடர்வகை (தொகைநிலை, தொகாநிலை)
2.5
துணை வினைகளும் கூட்டுவினைகளும்
அலகு – 3
இலக்கியப் பாடுப்பொருள்
3.1
அகத்திணை
3.2
புறத்திணை
3.3
யாப்பு
3.4
அணி
3.5
சொல்லாட்சிப் பிறழ்வுகள்
அலகு – 4
பயன்பாட்டு இலக்கணம்
4.1
மரபுச்சொற்களும் மரபுத்தொடர்களும்
4.2
மொழிவளத் தொடர்கள்
4.3
ஒற்றுப் பிழை
4.4
வாக்கிய அமைப்புகள்
4.5
மொழிப் பிழைகள்
அலகு – 5
மொழி கற்றல் வளமூலங்கள்
5.1
நிகண்டுகள், அகராதிகள், கலைக்களஞ்சியம்
5.2
தமிழ் கற்பிப்பதற்கான பார்வை நூல்கள்
5.3
திறனாய்வு நூல்களும் கட்டுரைகளும்
5.4
கருத்தரங்கம், பயிலரங்கம்
5.5
வலைத்தளங்கள் (மின் அகராதி, வலைப்பூக்கள்…)
தாள் – 3
தமிழில் படைப்பாற்றல் திறன்

தம் கருத்தைப் பிறருக்கு உணர்த்த உதவுவது மொழியாகும். மொழிவழியே உள்ளத்தில் எழும் அழகியல் உணர்வுகளை வெளிப்படுத்த முடியும். அவை கவிதை, கதை, நாடகம், கட்டுரை மற்றும் பல இலக்கிய வடிவங்களைக் கொண்டு அமைகிறது. இவற்றைப் படைக்கும் படைப்பாளர்கள், மொழியில் வல்லமை பெற்றவர்களாவர். இவர்கள் மொழியின் அடிப்படைத்திறன்களில் சிறந்து விளங்குவதோடு கற்பனை ஆற்றலைப் பெற்றிருப்பர். மேலும், சிறந்த எழுத்தாளர், பேச்சாளர், கவிஞர், நாடகவியலாளர் என இவர்கள் பன்முகத் திறன் கொண்டு விளங்குவர். இத்தகைய ஆற்றல் பெற்றவர்தான் படைப்பாற்றல் திறன் மிக்கவராவர். படைப்பாற்றல் திறன் மொழியின் உயர்நிலைத் திறனாக கருதப்படும். எனவே, படைப்பாற்றல் திறன் மிக்க மாணவ சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்கள், தாமும் படைப்புத்திறன் மிக்கவர்களாக இருக்கவேண்டும். என்ற நோக்கத்திற்காக இத்தாளானது உருவாக்கப்பட்டுள்ளது.

தாள் – 3 தமிழில் படைப்பாற்றல் திறன்
அலகு – 1 படைப்பாற்றல் - ஓர் உயர்நிலைத்திறன்
அலகு – 2 மொழிப்பாடத்தில் படைப்பாற்றல் திறன்கள்
அலகு – 3 படைப்பாற்றலை வளர்க்கும் வழிமுறைகள்
அலகு – 4 மொழியின் நடைமுறைப் பயன்பாடு
அலகு – 5 உலகளாவிய படைப்புகள்
அலகு – 1
படைப்பாற்றல் – ஓர் உயர்நிலைத்திறன்
1.1
குழந்தையும் படைப்பாற்றல் திறனும்
1.2
படைப்பாற்றலை ஊக்குவிக்கும் காரணிகள்
1.3
படைப்பாளரை அடையாளம் காணல்
1.4
படைப்பாற்றலை வளர்க்கும் செயல்பாடுகள்
1.5
படைப்பாற்றல் கல்வி
அலகு – 2
மொழிப்பாடத்தில் படைப்பாற்றல் திறன்கள்
2.1
மொழிப்பாடத்தில் படைப்பாற்றலின் இன்றியமையாமை
2.2
வகுப்பறைச் சூழலும் படைப்பாற்றல் வெளிப்பாடும்
2.3
கவிதையும் கதையும்
2.4
கட்டுரையும் கடிதமும்
2.5
படைப்பு வடிவ மாற்றம்
அலகு – 3
படைப்பாற்றலை வளர்க்கும் வழிமுறைகள்
3.1
படம்வழிப் படைப்பாற்றல்
3.2
சூழலுக்கேற்ற கற்பனை வெளிப்பாடு
3.3
மொழி விளையாட்டுகளும் குறுக்கெழுத்துப் புதிர்களும்
3.4
கையெழுத்து இதழ் உருவாக்குதல்
3.5
விளம்பரம், அறிவிப்பு, முத்திரைத் தொடர்கள் உருவாக்குதல்
அலகு – 4
மொழியின் நடைமுறைப் பயன்பாடு
4.1
குறிப்பெடுத்தலும் விரிவுபடுத்தலும்
4.2
நிறுத்தற் குறியீடுகள்
4.3
சுருக்க மொழிப் பயன்பாடு
4.4
சொற்பொழிவு ஆற்றல்
4.5
இலக்கிய நயம் பாராட்டல்
அலகு – 5
உலகளாவிய படைப்புகள்
5.1
குழந்தை இலக்கியங்கள்
5.2
சிறந்த புதுக்கவிதைகள்
5.3
மரபிலக்கியப் படைப்புகள்
5.4
சிறந்த சிறுகதைகள்
5.5
விருதாளர்களும் சிறந்த படைப்புகளும்
தாள் – 4
செய்முறைப் பயிற்சிகள்

ஆசிரியர் கல்வி பட்டயப் பயிற்சியில் இன்றியமையாத பகுதி பாடம் கற்பித்தலாகும். கற்றல், கற்பித்தல் என்பது வாழ்நாள் முழுவதும் நடைபெறும் ஒரு தொடர் செயல்பாடாகும். எனவே, பாடம் கற்பிக்கும் ஆசிரியர், பட்டறிவு மிக்கவராகவும் சிறந்த கற்பித்தல் உத்திகளைக் கையாள்பவராகவும் இருக்கவேண்டும். முன்தயாரிப்பில்லாமல் வகுப்பிற்குள் நுழையும் ஆசிரியர், அன்றைய வகுப்பறைச் சூழலை வெற்றிடமாக்கிவிடுவார். எனவே, கற்பித்தலுக்கு முன் நன்கு திட்டமிடவேண்டும். உற்றுநோக்குதல், கற்பித்தல் குறிப்புகள் தயாரித்தல், நுண்ணிலைக் கற்பித்தல் பயிற்சி, பாடம்கற்பிப்புத் திட்டம் எழுதுதல், துணைக்கருவிகள் உருவாக்குதல், கற்பித்தலில் புதுமைகளைப் புகுத்துதல், பாடநூல்களை ஆய்வு செய்தல் மற்றும் மதிப்பிடுதல் போன்ற பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்ளவேண்டும். அயலகச் சூழலில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர், தமிழின் இலக்கண இலக்கிய பனுவல்களைப் (Text) படிக்கவேண்டும். சிறந்த படைப்பாளர்களின் படைப்புகளைப் படித்துக் கற்பிக்க வேண்டும். தேமதுர தமிழோசை உலகமெல்லாம் பரவிட செய்ய வேண்டும். இவ்வாறு செய்முறைப் பயிற்சியை மேற்கொண்டால் கற்றல் கற்பித்தல் சிறப்பாக அமையும்.

தாள் – 4 செய்முறைப் பயிற்சிகள்
1 உற்று நோக்கல் படிவம் நிரப்புதல்
2 நுண்ணிலைக் கற்பித்தல் பயிற்சி
3 பாடம் கற்பிப்புத் திட்டம் தயாரித்தல்
4 பாடநூல் ஆய்வு
5 ஒரு வகுப்பு நடத்தப்பட்ட காணொலிப் பதிவு (10 முதல் 15 நிமிடங்கள்)
மேற்குறிப்பிட்டுள்ள பாடப் பொருண்மைகள் காணொளிகள் மற்றும் ஆய்வறிக்கை சமர்ப்பித்தல் வடிவில் வழங்கப்படவுள்ளன.

குறிப்பு : இக்கல்வித்திட்டம் தன்னார்வலர்களுக்குத் தமிழ்க் கற்பித்தல் பயிற்சி வழங்குவதற்கானது மட்டுமே. இதில் பயின்றவர்கள் எவ்வித வேலைவாய்ப்பும் கோர இயலாது.

புதுப்பிக்கபட்ட நாள் : 21-11-2024 16:15:23(இந்திய நேரம்)