Primary tabs
ஒலி, சொல், வாக்கியம் ஆகிய மூன்று கூறுகளைக் கொண்டது
மொழி. ஒலிக்குத் தரும் குறியீடு எழுத்து, சொல் உணர்த்துவது
பொருள். வாக்கியம் உணர்த்துவது விரிவான பொருள்.
அவ்வகையில் அர்த்தம் அல்லது பொருள் சொல்லோடும்,
வாக்கியத்தோடும் தொடர்புடையது. இவற்றைப் பற்றித் தெரிந்து
கொள்வது தேவையானது. ஒவ்வொரு மொழியும் தனக்கென்று
தனியான மொழியமைப்பைக் கொண்டுள்ளது. மொழி அமைப்பில்
மொழிகளுக்கு இடையில் ஒற்றுமைக் கூறுகளும், வேற்றுமைக்
கூறுகளும் உள்ளன. தமிழ் மொழி அமைப்பைப் பற்றி
இப்பாடத்தில் காணலாம்.