தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A05113l0-3.0 பாட முன்னுரை

3.0 பாட முன்னுரை

    காலந்தோறும் மொழியில் மாற்றம் ஏற்படுகிறது. ‘புதியன
தோன்றுகின்றன. பழையன மறைகின்றன. இவை குற்றமில்லை.
காலப் போக்கில் நேர்பவை’ என்பதை,

பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையினான

என்று நன்னூல் நூற்பா குறிப்பிடுகிறது. மொழியின் வரலாறு
என்பது காலப் போக்கில் நேர்ந்த மாற்றங்களை ஆராய்வதுதான்
என்று சுருக்கமாகக் கூறலாம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 04:46:51(இந்திய நேரம்)