Primary tabs
இந்தியா, மக்களாட்சி நடைபெறும் உலகின் மிகப்பெரிய நாடு.
பூமியின் நிலப்பரப்பில் 2.4 விழுக்காடு நிலப்பரப்பினைக்
கொண்டது. உலக மக்கள் தொகையில் 16 விழுக்காட்டினர்
இந்தியாவில் வாழ்கின்றனர். இந்திய அரசியல் சாசனம் 18
மொழிகளைத் தேசிய மொழிகளாக அங்கீகரித்துள்ளது. ஆட்சி
மொழி இந்தி, இணைப்பு மொழி ஆங்கிலம், தேசிய மொழிகள்
தவிர, இந்தியாவில் சுமார் 1652 மொழிகள் பேசப்பட்டு
வருகின்றன. இவற்றில் சுமார் 33 மொழிகள் ஒரு இலட்சத்திற்கும்
அதிகமானோரால் பேசப்படுகின்றன.