Primary tabs
திராவிட மொழிகளில் அடிச்சொற்கள் (Roots) ஓரசைச்
சொற்களாகவே உள்ளன. தெளிவாகப் பிரித்தறியும்படி உள்ளன.
அடிச்சொற்கள் தனியே நின்று பொருள் தருவதும் உண்டு.
சான்று:
இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் அடிச்சொற்களைப்
பிரித்தறிய
முடிவதில்லை. திராவிட மொழிகளில் எளிதில் பிரிக்க
முடியும். பொதுவாக அடிச்சொல்லுடன்,
சொற்கள்.
உரியதாகச் சிறப்பாக உணர்த்தும் சொற்கள்.
வேறுபாடுகளை உணர்த்துவன.
என்று மூன்று வகைகளில் சொற்கள் சேருகின்றன.
தமிழிலும், கன்னடத்திலும், ‘உகரம்’ ஒலித்துணையாகச்
சேர்கிறது.
சான்று:
திராவிட மொழிகளில் பெயர்ச் சொல் திணை, பால்,
எண், இடம் ஆகியவற்றை உணர்த்தும். பெயர்ச்சொல்லுடன்
சேர்க்கப்படும் உருபு வேற்றுமையை உணர்த்தும். திராவிட
மொழிகளில் திணை இருவகை. தமிழில் உயர்திணை,
அஃறிணை எனக் குறிப்பர். தெலுங்கில் மஹத், அமஹத்
எனக் குறிப்பர். திராவிட மொழிகளில் ஆண்பால்,
பெண்பால் என்று பால் பாகுபாடு உள்ளது. இந்தோ-ஐரோப்பிய
மொழிகளில் ஆண்பால், பெண்பால், அலிப்பால் என
முப்பால் உண்டு. வடமொழியில் உயிரில்லாத பொருளையும்
ஆண்பால், பெண்பால் என்று பகுக்கும் நிலை உள்ளது.
தமிழில் உயர்திணையில் ஒருவரை ஆண்பால் என்றும்,
பெண்பால் என்றும் பகுக்கும் நிலை உள்ளது. ஆனால் பலரை
அவ்வாறு பகுத்தல் இல்லை. ஆண் பன்மை, பெண் பன்மை
என்பன இல்லை. பலராக இருப்பின் ஆண், பெண் வேறுபாடு
இன்றிப் பலர்பால் என வழங்குதல் உள்ளது. அது போலவே
அஃறிணைப் பொருள்களுள் உயிருள்ள பொருள்களையும்
ஆண்பால், பெண்பால் எனப் பகுத்தல் இல்லை. அவற்றை
உயிரில்லாப் பொருள்களைப் போலவே ஒன்றன்பால், பலவின்
பால் எனப் பகுப்பர்.
தெலுங்கிலும், கோண்டியிலும்
மட்டும் ஒருத்தியை
(பெண்ணை)க் குறிக்கும் போது அஃறிணை ஒன்றன்பாலாகக்
குறிப்பர்.
சான்று:
அதுபோலவே, தோடர், கோடர் மொழிகளில் திணை, பால்,
எண் வேறுபாடு இல்லாத படர்க்கை இடப்பெயராகிய அதம்,
இதம் என்னும் சொற்களே அவன், அவள், அவர், அது, அவை,
இவன், இவள், இவர், இது, இவை என்னும் யாவற்றையும் குறிக்கப்
பயன்படுத்தப்படுகின்றன.
திராவிட மொழிகளில் ஒருமை பன்மை என எண் இரண்டே.
இருமை (Dual) என்ற ஒன்று இல்லை. ஆனால் வடமொழியிலும்,
வடமொழி சார்ந்த ஐரோப்பிய மொழிகளிலும் பெரு வழக்காக
ஒருமை, இருமை, பன்மை என அமைந்துள்ளது. திராவிட
மொழிகளின் உயர்திணைப் பன்மை உணர்த்தும் விகுதியும்,
அஃறிணைப் பன்மை உணர்த்தும் விகுதியும் வேறுபடுகின்றன.
ஒன்றற்குரியது மற்றொன்றுக்கு வழங்குவது இல்லை. அவர்
முதலான சொற்கள் தமிழில் உயர்திணை ஒருமையை உயர்சொல்
கிளவியாக உணர்த்தும் வழக்கு உள்ளது.
தமிழில் வேற்றுமை உணர்த்துவன உருபுகள் எனப்படும்.
தமிழில் வேற்றுமைகள் எட்டு. வடமொழியில் வேற்றுமை எட்டு.
இலத்தீன் மொழியில் ஆறு. கிரேக்க மொழியில் ஐந்து. திராவிட
மொழிகளில் பெயர்ச்சொற்கள் வேற்றுமை உருபுகள் ஏற்கின்றன.
திராவிட மொழிகளில் பெயர் ஈற்றுக்கேற்ப உருபு மாறுவதில்லை.
எல்லா ஈறுகளுடனும் உருபு ஒரே தன்மையாகச் சேர்ந்து நிற்கும்.
எனவே திராவிட மொழிகளிலும், சித்திய மொழிகளிலும்
பெயர்ச்சொற்கள் உருபு ஏற்கும் முறை ஒன்றேயாகும். ஆனால்
இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் பெயர் உருபேற்கும் முறைகள்
மிகப்பலவாம். திராவிட மொழிகளில் பெயர்ச்சொற்களின்
பின்னரே உருபுகள் சேர்க்கப்படுகின்றன. எனவே அவை தனியே
பிரிக்கக் கூடியனவாகவும் உள்ளன. ஆனால் இந்தோ-ஐரோப்பிய
மொழிகளில் உருபுகள் பெயர்ச்சொற்கேளாடு கலந்து ஒன்றாகிப்
பிரிக்க முடியாதனவாய் உள்ளன. திராவிட மொழிகளுக்கும்,
இந்தோ ஐரோப்பிய மொழிகளுக்கும் உருபு ஏற்கும் முறையில்
மற்றொரு வேறுபாடும் உண்டு. திராவிட மொழிகளில்
ஒருமைக்கும், பன்மைக்கும் ஒருவகை உருபே உண்டு. ஆனால்
இந்தோ ஐரோப்பிய மொழிகளில் ஒருமைக்கும், பன்மைக்கும்
வேறுவேறு உருபுகள் உள்ளன.
சான்று:
‘ஆல்’ என்ற உருபே ஒருமைக்கும், பன்மைக்கும்
பயன்படுத்தப்படுவதைச் சொல்லலாம். இங்ஙனம் திராவிட
மொழியும், ஐரோப்பிய மொழியும் வேற்றுமை உருபு ஏற்கும்
முறையில் வேறுபடுவதைக் காணலாம்.
ஒன்று, இரண்டு, மூன்று முதலியவை எண்ணுப் பெயர்கள்.
இவை எண்ணிக்கை அளவை உணர்த்துவன. ஒரு, ஓர், இரு, ஈர்,மு, மூ என்பவை
எண்ணுப் பெயர்களுக்கு அடைகளாக
வருபவை. அவை எண்ணப்படும் முறையை உணர்த்துகின்றன.
ஆங்கிலத்தில் இவற்றை cardinals, ordinals என்பர். தமிழில்
எண்ணலளவை என்றும், எண்ணுமுறை என்றும் கூறுவர்.
திராவிட மொழிகள் எல்லாவற்றிலும்
பெயர்களும்,
பெயரடைகளும் பயின்று வருகின்றன.
‘ஆம்’ என்னும் பெயரெச்சம் சேர்த்து எண்ணுமுறை
குறிக்கப்படுவதுண்டு.
சான்று:
ஆனால் ஒன்று என்ற பெயருடன், ‘முதல்’ என்னும் வேறு
சொல்லையும் பயன்படுத்தும் நிலை உள்ளது.
சான்று:
‘ஆம்’ என்பதற்குப் பதில் தமிழில் ‘ஆவது’ என்பதும்
சேர்த்து வழங்கப்படும்.
சான்று:
மூன்றாவது வீடு - தமிழ்