Primary tabs
தென்னிந்தியப் பகுதிகளில் வழங்கப்படும் திராவிட மொழிகள்
ஒன்றுக்கொன்று தொடர்புடையன. அவை தனிப்பட்ட பொது
இலக்கண அமைப்பைப் பெற்றுள்ளன. வழங்கும் இடத்தால் ஒரு
நெருக்கத்தையும் கொண்டுள்ளன. வேர்ச்சொற்கள்
இம்மொழிகளில் பொதுவாகவே உள்ளன. இவை ஒரே
குடும்பத்தைச் சேர்ந்தவை. மேனாட்டறிஞர்கள் மலபார் மொழிகள்
என்றும் தமுலிக் என்றும் இம்மொழிகளை வழங்கினர். இவற்றுள்
பழமையும், திருத்தமும் பெற்ற உயர்தனிச் செம்மொழியாகத்
திகழ்வது தமிழ். அதன் பெயராலேயே இவற்றைக் குறிப்பதில்
தவறு ஏதும் இல்லை. எனினும், தமிழ் என்பது குறிப்பிட்ட ஒரு
மொழியின் பெயராக இருப்பதால் திராவிடம் என்ற சொல்லைத்
தான் கையாளுவதாகக் கால்டுவெல் கூறுவார். இச்செய்திகளை
முன்பே அறிந்தோம் அல்லவா?
திராவிட என்ற வடசொல்லுக்கு Dramida, Dravida,
Dra-vida என்று மூன்று வடிவங்கள் உள்ளன. இப்பெயரைத்
தமக்கு முன் யார் யார் பயன்படுத்தியுள்ளனர் என்றும்
கால்டுவெல் குறிப்பிட்டுள்ளார்.
குமாரில பட்டர், தென்னிந்திய மொழி இனத்தை,
‘ஆந்திர-திராவிட பாஷா’ என்று குறித்துள்ளார்.
என்ற பொதுப்பெயரால் சுட்டப்பட்டுள்ளனர்.
என்னும் மொழியியலறிஞர், ‘திராவிடி’ என்ற பெயரால்
தென்னிந்திய மொழிகளைக் குறிக்கின்றார்.
இரவீந்திரநாத தாகூர் எழுதிய தேசீய கீதத்திலும் ‘திராவிட’
என்ற சொல்லைப் பரந்த நிலையிலேயே ஆண்டுள்ளார்.
தென்னிந்திய மொழி இனங்களையும், மக்களையும் சுட்டுவதற்குத்
திராவிடம் என்ற பெயரைக் கையாண்டுள்ளமை தெளிவு.
இந்தோ-ஆரிய மொழிகளின்
தாக்குரவு திராவிட
மொழிகளைப் பொறுத்த வரையில் சொற்களின் நிலையில் தான்
பெருமளவிற்குக் காட்சி தருகின்றது. இன்றைய நிலையில் திராவிட
மொழிக் குடும்பம் உலக மொழிக் குடும்பங்கள் வரிசையில்
ஆறாவது அல்லது ஏழாவது இடத்தைப் பெறுகின்றது.
இந்தியாவில் வழங்கும் நான்கு மொழிக் குடும்பங்களுள் இது
ஒன்றே முழுமையான இந்திய நாட்டு மொழிக் குடும்பமாகக்
கருதப்படுகிறது.
திராவிட மொழிகள் அனைத்தும் ஒரு மொழியிலிருந்து
தோன்றியவை. எல்லாத் திராவிட மொழிகளுக்கும் மூலமாக
இருந்த மொழியை மூலத் திராவிடம் அல்லது தொல்
திராவிடம் எனலாம். அதிலிருந்தே தமிழ், தெலுங்கு முதலான
மொழிகள் தோன்றியிருத்தல் வேண்டும். அந்த மூலமொழி
இன்று வழக்கில் இல்லை. எனினும் அதிலிருந்து தோன்றிய
திராவிடச் சொற்களை ஒப்பிட்டு, பல்வேறு விதிகளை
உருவாக்கி, தொல்மொழி இன்ன வடிவத்தில்தான் இருந்திருக்க
வேண்டும் என்று நிர்ணயித்துள்ளனர். இதை மீட்டுருவாக்கம்
என்பர். மீட்டுருவாக்கத்தின் மூலம்
தொல்திராவிடம்
இப்படித்தான் இருந்தது என்று நிர்ணயித்துள்ளனர்.
கூறுகளைக் கண்டறிதல்.
ஒப்பிடுதல்.
என்று மொழிநூலார் ஆய்கின்றனர். ஆனால் மூலத்
திராவிடமொழி என்பது மொழிநூலாரின் ஊகமே தவிர முடிந்த
முடிவு அன்று. எமனோ மீட்டுருவாக்கம் மூலம் தொல்
திராவிட
மொழியின் தன்மைகளை ஆய்ந்துள்ளார்.
மூலத் திராவிடம் அல்லது தொல்திராவிட மொழிச்
சொற்களின் வேர்களை அல்லது மூலச் சொற்களை ஏனைய
மொழிகளை விடத் தமிழே பெரிதும் பேணிக் காத்துள்ளது.
தொல் திராவிடத்தில் ஐந்து குறில் உயிர்களும்,
ஐந்து நெடில்
உயிர்களும் உள்ளன. தொல் திராவிட மொழியில் உள்ள பத்து
உயிர் ஒலியன்களும் எல்லாத் திராவிட மொழிகளிலும் அப்படியே
இருக்கின்றன.
தொல் திராவிட மொழியில் ககர ஒலியன் எல்லா
உயிர்களுடனும் மொழிக்கு முதலில் வந்துள்ளது. தொல் திராவிட
மொழியில் மொழிக்கு முதலில் வரும் சகரம் திராவிட
மொழிகளில் சில மாற்றங்களை அடைந்துள்ளது. தமிழ் மொழியில்
உள்ள சகரத்தை முதலாகக் கொண்டு தொடங்கும் பல சொற்கள்
சகர மெய் இல்லாமல் உயிரெழுத்துடன் தொடங்குவனவாக
அமைந்திருக்கக் காணலாம்.
சான்று:
சமைத்தான் - அமைத்தான்
சான்றோர் - ஆன்றோர்
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற
மொழிகளில் காணப்படும் ‘உப்பு’ என்ற சொல் பண்டைக்
காலத்தில் ‘கப்பு’ என்றும் வழங்கியுள்ளமையைக் காணலாம்.
தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் சகரமாக வருவது,
கன்னடம், துளு போன்ற மொழிகளில் ககரமாகவும்,
நடுத்திராவிட மொழிகளில் ஸகரமாகவும், பெங்கோ,
மண்டோ, கூவி மொழிகளில் ஹகரமாகவும் அமைந்துள்ளது.
தோடா மொழியில் சகரம் தகரமாக மாறியுள்ளது. தோடா,
கோத்தா மொழிகள் தமிழ், மலையாளத்திலிருந்து பிரிவுபட்டுக்
கன்னடம், குடகு, துளு போன்ற மொழிகளுடன் ஒன்றுபட்டு
நிற்றலைக் காண்கிறோம்.
தொல் திராவிடத்தில் கிறுக்கன், முதுகன் என்னும்
சொற்களில் ‘கன்’ ஆண்பால் விகுதியாக உள்ளது. தொல்
திராவிடத்தில் நான்கு என்னும் எண்ணைக் குறிக்க ‘நால்கு’
என்னும் சொல் உள்ளது. சங்க இலக்கியத்தில் ‘நால்கு’
வந்துள்ளது. ‘லகரம்’ ‘னகரமாக’ மாறிய மாற்றம் திராவிட
மொழிகள் ஒன்றாய் இருந்த காலத்தில் ஏற்பட்டிருத்தல்
வேண்டும்.
நால்கு - நான்கு
தொல் திராவிட மொழியில் எதிர்மறை
விகுதியாக ஆ
இருந்தது.
அது பாடாது - ஆ (எதிர்மறை விகுதி)
‘எட்டு’ என்னும் எண்ணுப் பெயர் கன்னடத்தில் ‘எண்டு’
என்றும், தமிழ், மலையாளம், தோடா, கொடகு மொழிகளில்
எட்டு என்றும் வழங்குகிறது. மூலத்திராவிட மொழியில் ‘எண்ட்டு’
என்று இருந்திருத்தல் வேண்டும். கன்னடத்தில் டகரம் கெட்டு
எண்டு என்றும்; தமிழிலும், மலையாளத்திலும் ணகரம் கெட்டு
எட்டு என்றும் மாறிவிட்டது.
‘அ’ எனும் தொல் திராவிட உயிர் எல்லாத் திராவிட
மொழிகளிலும் ‘அ’ ஆகவே உள்ளது. தோடா மொழியில் a
ஆகவும், o ஆகவும், பர்ஜியில் e ஆகவும் உள்ளது.
சான்று:
* a - தொல் திராவிட ‘அ’ உயிர்.
யாளம்
(pig)
இவ்வாறே எல்லா உயிர்களும் அமைவதைக் காணலாம்.
திராவிடச் சொல் பிறப்பியல் அகராதியில் (A Dravidian
Etymological Dictionary) தொல் திராவிட மொழியிலும் மற்ற
திராவிட மொழியிலும் உள்ள
இன ஒலிகள்
கொடுக்கப்பட்டுள்ளன. தொல் திராவிட மொழியிலும், தமிழிலும்
உள்ள இன ஒலிகளைக் காண்போம்.