தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

2.6 தொகுப்புரை

2.6 தொகுப்புரை

தமிழ் நாடக வரலாற்றில் சிற்றிலக்கிய நாடகங்கள்
குறிப்பிடத்தக்கனவாக உள்ளன. அவை ஒவ்வொன்றும் அதனதன்
நோக்கத்தில் தெளிவாகப் படைக்கப்பெற்றுள்ளன.

நொண்டி, கீர்த்தனை, பள்ளு, குறவஞ்சி ஆகிய சிற்றிலக்கிய
நாடகங்கள், வடிவம், கதையமைப்பு, கருத்து, நாடக வழங்கு
முறை, நாடகப் பங்களிப்பு ஆகியவற்றில் தனித்தன்மை கொண்டு
விளங்குகின்றன.

நொண்டி, குறவஞ்சி போன்றவை முக்கிய பாத்திரத்தின்
தன்மையாலும், கீர்த்தனை இசை வடிவத்தாலும், பள்ளு வாழ்க்கை
முறைச்     சித்திரிப்பாலும்     பெயர் கொண்டமைகின்றன.
மக்களுக்கான வாழ்வியல் கருத்துக்களை வெளிப்படுத்துவதிலும்,
அறிவுரை கூறுவதிலும், கருத்துப் பிரச்சாரம் செய்வதிலும்
இவ்வகை நாடக வடிவங்கள் தனித்தன்மையான பங்களிப்புச்
செய்கின்றன.

படிப்பதற்கும், நாடக வடிவமாக்குதற்கும் ஏற்ற வகையி்ல்
இவை அமைந்துள்ளன.

1.
‘பள்ளு’ நாடகத்தின் தோற்றம் எப்போது எனக்
கணக்கிடப் பெற்றுள்ளது?
2.
‘பள்ளு’ யாருடைய வாழ்வினைச் சித்திரிக்கிறது?
3.
பள்ளு நாடகத்தில் குறிப்பிடத்தக்க இரண்டினைக்
குறிப்பிடுக.
4.
குறவஞ்சி வகைகளில் இரண்டினைக் குறிப்பிடுக.
5.
குறவஞ்சி, யாரை மையப்படு்த்திப் படைக்கப்பட்டுள்ளது?
6.
வேதநாயக சாத்திரியாரால் எழுதப்பெற்ற குறவஞ்சியின்
பெயரைக் குறிப்பிடுக.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 05:51:05(இந்திய நேரம்)