தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

6.1 நாடக வகைக்கூறுகள்

6.1 நாடக வகைக் கூறுகள்

நாடகம் பல்வேறு நிலைகளில் படைக்கப்படுவதே நாடக வகை
எனப்படும். நாடகம் படைக்கப்படும் போது அதன் வகைகள்
மேம்பட்டு வெளிப்படும். இவை குறித்து நாம் அறிவது நாடகம்
குறித்த நம் சிந்தனையைத் தெளிவு படுத்தும். மேலும் நாடகம்
குறித்த நமது அறிவு வளர்ச்சிக்குத் துணை நிற்கும். எனவே
இவ்வகைகளின் கூறுகள்     குறித்து     அறியவேண்டியது
முக்கியமானதாகும்.

பிற கலை வடிவங்களினின்று மாறுபட்ட, உயிரோட்டமிக்க,
கலை வடிவமாக நாடகக்கலை விளங்குகிறதல்லவா! அதனால்
அது பலவகைகளாகப் பரிணமிப்பது இயல்புதானே! எனவே நாடக
வகைகளை நோக்குமுன்னர், நாடக வகைப் பாகுபாட்டிற்கான
அடிப்படைக் கூறுகள் எவை என அறிய முற்படுவோம்.

  • அடிப்படைக் கூறுகள்


  • படைப்புநிலை, பண்புநிலை, சுவைநிலை மற்றும் கதை சார்ந்த
    நிலைகளில் நாடக வகைகள் பொதுவாக அமையும். அதனைக்
    கீழ்க்காணும் படம் மூலம் காணலாம்.

    இவையாவும் பொதுவான பாகுபட்டு நிலைகள் அல்லது
    கூறுகள் ஆகும்.

    இவ்வகைப் பாகுபாட்டின் அடிப்படையில்தான் தமிழ் நாடக
    வகைகள் பொதுவாகப் படைக்கப் படுகின்றன.

    Tags   :

    புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 05:55:57(இந்திய நேரம்)