தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

1.2-ஆங்கிலம் ஆட்சி மொழி

1.2 ஆங்கிலம் ஆட்சிமொழி


மெக்காலே

இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர், ஆங்கில மொழியை ஆட்சி
மொழியாக இந்திய மக்களின் மீது திணித்தனர். 1835 ஆம்
ஆண்டு மெக்காலே வெளியிட்ட ஆங்கில முறைக்கல்வி பற்றிய
அறிக்கைக்குப் பின்னர், ஆங்கிலம் ஆட்சி மொழியானது.
ஹார்டிங் 1844 ஆம் ஆண்டு பிறப்பித்த ஆணையின்படி
ஆங்கிலம் எழுதவும், படிக்கவும் தெரிந்தவர்கள் மட்டும் அரசுப்
பணியில் முன்னுரிமை பெற்றனர். மரபு வழிப்பட்ட தமிழ்க் கல்வி
புறக்கணிக்கப்பட்டு, ஆங்கிலக் கல்வி முக்கியத்துவம் அடைந்தது. ஆட்சியிலிருந்த ஆங்கிலேயர் போல ஆங்கிலத்தில் பேசுவதும் எழுதுவதும் உயர்வானது என்ற புனைந்துரை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் ஆட்சி மொழியாகத்
தமிழகத்தில் ஆங்கிலம் அரியணை ஏறியது.

தமிழகத்தில் ஆட்சி மொழியாகத் தமிழே இருக்க
வேண்டுமென்று     மாயவரம்     வேதநாயகம்     பிள்ளை,
மறைமலையடிகள், திரு.வி.கலியாணசுந்தரனார், பாரதியார்,
பாரதிதாசன், தேவநேயப்பாவாணர் போன்றோர் முயன்றனர்.
அவர்களின் விருப்பம் 1956-ஆம் ஆண்டு தமிழகப்
பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆட்சி மொழிச்சட்டம் மூலம்
நிறைவேறியது.

பாரதியார்
தேவநேயப் பாவாணர்
பாரதிதாசன்

தன்மதிப்பீடு : வினாக்கள் - I

1.
சோழர் காலத்தில் ஆட்சி மொழிச் சொற்கள்
பெரிதும் எதில் இருந்தன?
2.
பிற்காலப் பாண்டியர்கள் காலத்தில் எத்தகைய
மொழி செல்வாக்குப் பெற்றது?
3.
முகலாயர் தமிழகத்தை ஆண்ட போது தமிழுக்கு
வந்த பிறமொழிச் சொற்களை எழுதுக.
4.
தமிழகத்தில் தமிழே ஆட்சி மொழியாக இருக்க வேண்டுமென்று முயற்சி செய்த தமிழறிஞர்கள் பெயர்களைக் கூறுக.
5.
தமிழகத்தில் ஆட்சிமொழியாகத் தமிழ் வழங்க
வேண்டுமென்பது     எந்த     ஆண்டு
சட்டமாக்கப்பட்டது?

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 21:55:15(இந்திய நேரம்)