Primary tabs
1.4 ஆட்சித் தமிழ் முன்னோடிகள்
தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டுமென மொழியறிஞர்களும்
சமூக அக்கறை மிக்கவர்களும் தொடர்ந்து வலியுறுத்தினாலும்,
அதற்காக நடைமுறையில் செயற்பட்டவர்களின் முயற்சி
முக்கியமானது. இத்தகையோரில் தேவநேயப்பாவாணர்,
கா.அப்பாத்துரை, கீ.இராமலிங்கம், கோ.முத்துப்பிள்ளை
ஆகியோர் ஆட்சிச்சொல் மொழிபெயர்ப்புகளில் முனைந்து
செயற்பட்டுள்ளனர். வெறுமையான தமிழ் மொழி பற்றிய
ஆரவாரக் கூச்சலுக்கிடையில், தமிழை ஆட்சி மொழியாக்கிட
முனைந்த அறிஞர்களின் பணி போற்றத்தக்கது.

பாவாணர்
தமிழகத்தில் வடமொழிக் கலப்பால் தமிழன் மறந்த சொற்கள்
பலவற்றையும் மீட்டெடுத்தவர் பாவாணர் ஆவர். ஆங்கிலம்
அரசின் மொழி என்ற காரணத்தினால், தமிழர்
அதைப்
போற்றவும், தமிழைத் தூற்றவும் முயன்றனர் என்று குறிப்பிடும்
பாவாணர், தமிழை ஆட்சி மொழியாக்குவதற்காகப் பல்வேறு
ஆங்கிலச் சொற்களைத் தமிழாக்கி உள்ளார். அவற்றில்
சில
பின்வருமாறு.
கா.அப்பாத்துரை ஆட்சித் தமிழுக்காகப் பல்வேறு பணிகள்
புரிந்துள்ளார். புதுச்சொல் படைத்தும், வழக்கிலுள்ள
சொற்களைப் புதுக்கியும் ஆட்சிச் சொற்களை
முயன்று
உருவாக்கியுள்ளார். அவற்றில் சில :
தமிழில் ஆட்சிச் சொற்கள், ஆட்சித்துறைத் தமிழ்,
தமிழில்
எழுதுவோம் எனும் நூல்களை எழுதி ஆட்சித்
தமிழின்
வளர்ச்சிக்கு கீ.இராமலிங்கம் தொடர்ந்து பாடுபட்டார். இவர்
பல்வேறு அரசுப் பணிகளின் வழியாக ஆட்சித்
தமிழ்
மொழிபெயர்ப்புகளில் முனைந்து செயல்பட்டார்.
இவரது
சொல்லாக்கங்களுக்குச் சான்றுகள் பின்வருமாறு :
மொழிபெயர்ப்பிலும் சொல்லாக்கத்திலும் திறமை
மிக்க
கோ.முத்துப்பிள்ளை ஆட்சித் தமிழ் வளர்ச்சியில் அயராது
உழைத்தார். இவரது ஆட்சித் தமிழ் மொழியாக்கங்களில் சில
பின்வருமாறு :