தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

1.5-ஆட்சிச் சொற்களும் தமிழாக்க முறைகளும்

1.5 ஆட்சிச் சொற்களும் தமிழாக்க முறைகளும்


     தமிழை ஆட்சி மொழியாக்குவதற்காகத் தயாரிக்கப்பட்ட
ஆட்சிச் சொல்லகராதியில் ஏறக்குறைய 9000 சொற்கள்
தமிழாக்கப்பட்டுள்ளன. உலகமெங்கும் நடைபெறும் அறிவியல்
ஆய்வுகளை எல்லாம் தமிழ்ச் சொற்களால் விவரிக்குமளவு,
தமிழ்மொழி வளமுடையது. எனவே தான் பழைய மரபுகளைக்
கருத்தில் கொண்டும் புதிய மொழி இயலுக்கு
ற்பவும்
ஆட்சித் தமிழ் மொழிபெயர்ப்புகள் தமிழில் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன. இத்தகைய சொற்களில் பல நிலைத்து நிற்கின்றன;
சில வழக்கொழிந்து போகின்றன; இந்நிலை தொடர்ந்து
நடைபெற்று வருகின்றது.


1.5.1 ஓர் ஆங்கிலச் சொல் - பல தமிழ் வடிவங்கள்


    ஆட்சி மொழிப் பயன்பாட்டில் ஓர் ஆங்கிலச் சொல்,
வெவ்வேறு     துறைகளில்     வெவ்வேறு பொருள்களில்
வழங்கப்படுகின்றது.     எனவே     அச்சொல், துறையின்
தேவைக்கேற்ப, கையாளுவதற்கு ஏற்ற வடிவில் பல்வேறு
வடிவங்களில் தரப்பட்டுள்ளது.


Candidate

- வேட்பாளர், தேர்வு நாடுபவர்,
பணிக்கு விண்ணப்பிப்பவர்

Junction

- சந்திப்பு, கூடல், சந்தி, இணைப்பு

Accord

- இசைவு, ஒப்பந்தம், பொருத்தம்,
அணி

Bar

- வழக்குரைஞர் குழாம்,
விசாரணைக்கட்டு, கம்பி, பாளம்,
தாடை, மதுக்கூடம்


1.5.2 திட்டவட்டமான மொழிபெயர்ப்புகள்


    ஆட்சித்துறையில் அடிக்கடி புழங்கி வரும் சில சொற்களுக்குத்
திட்டவட்டமான முறையில் சொற்களைத் தமிழாக்குவது
வழக்கிலுள்ளது. இத்தகைய போக்கு வெகுசன ஊடகங்களின்
வழியாக உறுதிப்படுத்தப்பட்ட மொழிபெயர்ப்புச் சொற்களை
ஏற்றுக்கொள்கிறது. அவற்றுள் சில :


Legislative
Assembly
- சட்டமன்றப்
பேரவை
Lok Sabha
- நாடாளுமன்றம்
Immediate
- உடனடி
Dismissal
- விலக்கல்
Suspension
- இடை நீக்கம்
Transfer
- மாற்றம்


1.5.3 நுண்ணிய பொருள் வேறுபாடுகள்


    ஆங்கிலத்தில் நடைமுறை காரணமாகச் சில சொற்கள்
நுண்ணிய பொருள் வேறுபாடுகளை உடையவையாக உள்ளன.
இவற்றினுக்கேற்ற தமிழ்ச் சொற்கள் கிடைப்பது அருமை.
எனினும் தற்பொழுது பயன் படுத்தப்படும் சொற்கள் பொருளின்
நுண்மையான வேறுபாட்டினை விளக்க முயலுகின்றன. அவை
பின்வருமாறு


Zone
- மண்டலம்
Region
- வட்டாரம்
Proposal
- கருத்துரு
Deed
- ஒப்பாவணம்
Record
- பதிவுரு
Bond
- பிணைமுறி


1.5.4 ஒருசொல் - ஒருபொருள்


    குறிப்பிட்ட ஒரு பொருளையே தருவன போல் தோன்றும் சில
சொற்கள் குறித்த பொருளையே தருவதை ஆங்கிலத்தில்
காணலாம். எனவே,     குறித்த ஒரு பொருளையே
தருவதற்குரியனவாக அவற்றைத் தமிழ் ஆக்கி உள்ளதனைப்
பின்வரும் சான்றுகள் விளக்குகின்றன.


Grade
- தரம்
Cadre
- பணிப்பிரிவு
Rank
- வரிசை
Overseer
- பணிப்பார்வையாளர்
Manager
- மலோளர்
Supervisor
- மேற்பார்வையாளர்
Review
- மறு ஆய்வு
Revision
- சீராய்வு
Decision
- முடிவு
Judgement
- தீர்ப்புரை


1.5.5 மாறும் சொல்வடிம்


    மொழியானது காலந்தோறும் மாறும் இயல்புடையது. மொழியின்
வளர்ச்சியானது, புதிய சொல்லாக்கங்கள், தொடரமைப்புகளுடன்
நெருங்கிய தொடர்புடையது. ஆட்சித் தமிழ்ச்சொற்களின் மொழி
பெயர்ப்பானது மாறிவரும் சூழலுக்கேற்பப் புதிய வடிவங்களையும்,
சொற்களையும் ஏற்றுக் கொள்வதாக அமைய வேண்டும். (எ.கா)


(i) Collector
தண்டல் நாயகர்
தண்டல் தலைவர்
ஆட்சித் தலைவர்
ஆட்சியர்
(ii) Casual Leave
நேர்வு விடுப்பு
சிறு விடுப்பு
சில்லறை விடுப்பு
தற்செயல் விடுப்பு

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 21:55:20(இந்திய நேரம்)