தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

P20223l5-3.5 திருக்கோயில்களில் திவ்வியப்பிரபந்தம்

3.5 திருக்கோயில்களில் திவ்வியப்பிரபந்தம்
திருமங்கையாழ்வார்     காலத்திலேயே     திவ்வி்யப்
பிரபந்தங்களைத்
திருக்கோயில்களில் பாடும் மரபு உருவாயிற்று.
திருவரங்கம் கோயிலில் உற்சவரின் முன் ஒரு திருக்கார்த்திகைத்
திருவிழாவின் போது     திருமங்கையாழ்வார் தம்முடைய
திருநெடுந்தாண்டகப்
பாசுரங்களைப் பண்ணுடன் பாடி
அபிநயி்த்தார் என அறிகிறோம். திவ்வியப்பிரபந்தம் ஓதுதலைத்
திருவரங்கம் கோயிலில் நடைமுறைக்குக் கொண்டுவந்து, அதை
மற்றைய வைணவ ஆலயங்களிலும் செயல்படுத்துமாறு செய்தவர்
நாதமுனிகள் ஆவார். அவர்காலம் தொடங்கித் திருவரங்கத்தில்
பகல்பத்து
எனப்படும் திருமொழித் திருநாளும் இராப்பத்து
எனப்படும் திருவாய்மொழித்     திருநாளும் நடைபெற்று
வருகின்றன. நம்பிள்ளை தம் ஈட்டுரையில் திருவத்யயனம்
என்று இவ்விழாவைக் குறிப்பிடுகின்றார்.

மேலும் வைணவ ஆலயங்களில் கடந்த ஆயிரம்
ஆண்டுகளுக்கு மேலாக அரையர் சேவை என்னும் ஒரு
நிகழ்ச்சியும் நடைபெற்று வருகின்றது. ஆழ்வார் பாசுரங்களை
இசையுடன் பாடி அனுபவித்து அவற்றின் வியாக்கியானங்களை
(தமிழும் வடமொழியும் கலந்த உரைப்பகுதிகளை) அழகுறப் பேசி
நடிக்கும் முத்தமி்ழ்க்கலையே அரையர்சேவையாகும். பாசுரத்தைப்
பண்ணுடன் பாடுதல், பாசுரத்திற்கு அபிநயம் செய்தல்,
பாசுரத்திற்கு உரை கூறுதல் என்னும் முறையில் இக்கலையானது
அமையும். இதனால் ஆழ்வார் பாசுரங்களை இயற்பா, இசைப்பா
எனப் பகுத்ததுடன் அமையாது, முத்தமி்ழின் ஒரு கூறான
நாடகத் தமிழையும் மறவாது இணைத்துப் போற்றிய திறன்
நினைத்தற்குரியது.

வைணவக் கோயில்களில் விழாக்காலங்களின்போது இறைவன்
நடுவே எழுந்தருள, அவனுக்கு முன்னே திவ்வியப்பிரபந்தமும்
பின்னே வடமொழி வேதமும் பாராயணம் செய்யப்பட்டு வருதல்
காணலாம். தமிழ் வேதமாகிய திவ்வியப் பிரபந்தம் அவனது
இயல்பை (சொரூபம்) உணர்ந்து முன்செல்லுதல் தோன்ற முன்னே
ஓதப்படுகிறது என்றும், வடமொழி வேதம் அவனை


குமரகுருபரர்

(பெரியபடம் காண)

எட்டமாட்டாது நாடித் தொடர்ந்து செல்லுதற்கு அறிகுறியாக எம்பெருமானுக்குப் பின்னே ஓதப்படுகிறது என்றும் இதற்கு விளக்கம் கூறுவர். இதனால் திவ்வியப்பிரபந்தத்தின் பெருமை விளங்கும். இதனைக் கருதியே,

பழமறைகள் முறையிடப் பைந்தமிழ்ப் பின்சென்ற
பச்சைப் பசுங்கொண்டலே

என்று பாடினார் குமரகுருபரர். அவருக்கு முன்னர் படர்ந்து
ஆரணம் முழங்கப் பஞ்சவர்க்குத் தூது நடந்தான்
என்று
இளங்கோவடிகளும் பாடியிருத்தல் காணலாம். கம்பரும் தம்
சடகோபரந்தாதியில்
‘ஆழ்வார் பாசுரத்தின் ஓர் அடியையேனும்
கடந்துசெல்ல எம்பெருமானால்     இயலுமோ?’ என்னும்
பொருள்படப் பாடியிருத்தலும் இங்கு எடுத்துக்காட்டத்தக்கது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 22:10:06(இந்திய நேரம்)