Primary tabs
ஒரு நாவலுக்கு முதலாவது தேவை ஒரு
கதையாகும்.
கதையை எடுத்துரைப்பதே நாவலின் தலையாய கடமையாகும்.
நாவலின் தோற்றத்திற்கே கதை கூறும் இயல்புதான்
காரணமாக
இருந்திருக்கிறது.
கதை என்பது, தொடங்க வேண்டியதில்
தொடங்கி முடிய
வேண்டிய இடத்தில் முடியும் நிகழ்ச்சிகளின் தொடர்பறாத
விவரிப்பே ஆகும். எந்த
இடத்தில் கதையைத் தொடங்கினால்
சுவையாக இருக்கும்
என்பதை மனத்தில் வரையறுத்துக்
கொண்டு நாவலாசிரியர்
கதையை அந்த இடத்தில் இருந்து
தொடங்குவது வழக்கம்.
இவ்வாறு தொடங்கப்பட்ட கதையைப்
பாத்திரங்களின்
செயல்பாடுகளால் வளர்த்து முடிக்க வேண்டிய
இடத்தில்
முடிக்கலாம். சாதாரணமாக ஒரு கதைக்குத்
தொடக்கமோ
முடிவோ கிடையாது. படைப்பாளன் விருப்பம்
போல் ஒரு
குறிப்பிட்ட சூழலின் அனுபவத்தைத்
தேர்ந்தெடுத்து
முன்னாகவோ, பின்னாகவோ கதையை
அமைக்கலாம்.