தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

6.0 பாட முன்னுரை

6.0 பாட முன்னுரை

உடனுக்குடன் அனைத்தையும் பரிமாறிக் கொள்ளும்
ஊடகங்களில் இதழ்கள்     குறிப்பிடத்தக்க இடத்தைப்
பெறுகின்றன. எங்கும், எதிலும் விளம்பரமே தலைதூக்கி
நிற்கும் இக்காலத்தை ‘விளம்பர ஊழி’ என்றும் கூறலாம்.
அனைத்து வயதினர்க்கும், அனைத்து மதத்தினர்க்கும்
இடையே ஊடாடி, அனைவரையும் கவர்வது விளம்பரம்
ஆகும். விளம்பரம் செய்யும் நிறுவனம், உற்பத்தி நிறுவனம்,
நுகர்வோர் ஆகிய முக்கோணப் பயன்பாட்டின் அடிப்படையில்
விளம்பரம் ஓர் இன்றிமையாத இடத்தைப் பெற்றுள்ளது.

உலக மயமாக்கத்தில் மிகக் கலந்துவிட்ட இன்றைய
பண்பாடு மனித மனங்களைப் புதியதை விரும்பச் செய்கிறது.
அப்புதியதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் விளம்பரங்கள்
முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதழ்களில் இடம்பெறும்
விளம்பரங்களின் தன்மைகளை விளக்குவனவாக இப்பாடம்
அமையும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 23:10:13(இந்திய நேரம்)