தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

ஒளிறு வாட் பொருப்பன்

ஒளிறு வாட் பொருப்பன்
22. வையை

மழை பெய்தலும் நீர்ப் பெருக்கும்
ஒளிறு வாட் பொருப்பன் உடல் சமத்து இறுத்த
களிறு நிரைத்தவைபோல் கொண்மூ நெரிதர,
அரசு படக் கடந்த ஆனாச் சீற்றத்தவன்
முரசு அதிர்பவைபோல் முழங்கு இடி பயிற்றி,
5
ஒடுங்கார் உடன்றவன் தானை வில் விசை
விடும் கணை ஒப்பின் கதழ் உறை சிதறூஉ,
கண் ஒளிர் எஃகின் கடிய மின்னி, அவன்
வண்மைபோல் வானம் பொழிந்த நீர் - மண்மிசை
ஆனாது வந்து தொகுபு ஈண்டி, மற்று-அவன்
10
தானையின் ஊழி...... தாவூக் கத்தின்,
போன நிலம் எல்லாம் போர் ஆர் வயல் புகுத-
.... ... ... நீக்கிப் பு...
கான மலைத்தரை கொன்று மணல பினறீ
வான மலைத்த ...... வ
15
....... லைத்தவ மண முரசு எறிதர,
தானைத் தலைத்தலை வந்து மைந்து உற்று,

மைந்தரும் மகளிரும் கரையையும் வையையையும் சேர்கின்ற அழகு
பொறிவி யாற்றுறி - துவர், புகை, சாந்தம்,
எறிவன எக்குவ ஈரணிக்கு ஏற்ற
நறவு அணி பூந் துகில் நன் பல ஏந்தி,
20
பிற தொழின ... ம் பின்பின் தொடர;
செறி வினைப் பொலிந்த செம் பூங் கண்ணியர்,
ஈர் அமை வெட்சி இதழ் புனை கோதையர்,
தார் ஆர் முடியர், தகை கெழு மார்பினர்;
மாவும், களிறும், மணி அணி வேசரி,
25
காவு நிறையக் கரை நெரிபு ஈண்டி;
வேல் ஆற்றும் மொய்ம்பனின், விரை மலர் அம்பினோன்-
போல், ஆற்று முன்பின் புனை கழல் மைந்தரொடு,
தார் அணி மைந்தர் தவப் பயன் சான்மென-
கார் அணி கூந்தல், கயற் கண், கவிர் இதழ்,
30
வார் அணி கொம்மை, வகை அமை மேகலை,
ஏர் அணி இலங்கு எயிற்று, இன் நகையவர்-
'சீர் அணி வையைக்கு அணிகொல்லோ? வையைதன்
நீர் அணி நீத்தம் இவர்க்கு அணிகொல்?' எனத்
தேருநர் தேருங்கால், தேர்தற்கு அரிது காண்-
35
தீரமும் வையையும் சேர்கின்ற கண் கவின்.

திருமருத முன்துறைக் காட்சிகள்
மண் கணை முழவின் இன் கண் இமிழ்விற்கு
எதிர்வ பொருவி ..... மேறு மாறு இமிழ்ப்ப,
கவர் தொடை நல் யாழ் இமிழ, காவில்
புகர் வரி வண்டினம் பூஞ் சினை இமிர,
40
ஊது சீர்த் தீம் குழல் இயம்ப, மலர்மிசைத்
தாது ஊது தும்பி தவிர்பு அல இயம்ப,
....... துடிச் சீர் நடத்த வளி நடன்
மெல் இணர்ப் பூங் கொடி மேவர நுடங்க,
ஆங்கு அவை தத்தம் தொழில் மாறு கொள்ளும்-
45
தீம் புனல் வையைத் திருமருத முன்துறையால்.
கோடு உளர் குரல் பொலி ஒலி துயல் இருங் கூந்தல்,
... ... ... புரை தீர் நெடு மென்
தோள் தாழ்பு தழை மலர் துவளா வல்லியின்,
நீள் தாழ்பு தோக்கை, நித்தில அரிச் சிலம்பு,
50
...
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 12:28:37(இந்திய நேரம்)