தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

TVU Courses-- புணர்ச்சி மாற்ற வரலாறு

  • பாடம் - 4

    D04114 புணர்ச்சி மாற்ற வரலாறு

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

        தமிழ் மொழியில் பலவிதமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அவ்வாறு நிகழ்ந்த மாற்றங்களின் தாக்கம் எழுத்து, சொல், பொருள் ஆகியவற்றில் மட்டும் அல்லாமல் புணர்ச்சியிலும் ஏற்பட்டது என்பது பற்றி விளக்குகிறது.

         பழந்தமிழ்க் காலம் என்று கூறக்கூடிய சங்க காலத்திலும் இடைக்காலத்திலும் அவ்வளவாகப் புணர்ச்சியில் மாற்றங்கள் ஏற்படவில்லை என்பது பற்றியும், தற்காலத்தில் பல்வேறு சூழல்களால் மாற்றங்கள் புணர்ச்சி விதியிலும் ஏற்பட்டுள்ளன என்பது பற்றியும் விளக்குகிறது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

        பழங்காலத்தில்     தோன்றிய     தொல்காப்பியம், இடைக்காலத்தில் தோன்றிய நன்னூல், வீரசோழியம் போன்ற இலக்கண நூல்கள் புணர்ச்சிக்கு எவ்வாறான முக்கியத்துவத்தைக் கொடுத்துள்ளன என்ற செய்தி நமக்குக் கிடைக்கப் பெறுகிறது.

    • மரபிலக்கணங்கள் பொதுவாக அதிகக் கவனத்தைப் புணர்ச்சி விதியில் ெசலுத்தியுள்ளன என்றும், தற்காலத்தில் எழுந்த மொழியியல் நூல்களில் கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம், மு.வ.வின் மொழிநூல், இன்னும் சில நூல்கள் புணர்ச்சிக்காக ஒரு சிறுபகுதியை     மட்டுமே ஒதுக்கியுள்ளன என்றும் அறியமுடிகிறது.

    • தற்காலத்தில் மனிதன் பல சமூகத்தினரோடு பழகுவதால் அவனுடைய கலாச்சாரத்திலும் மொழியிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதும், அம்மாற்றங்கள் புணர்ச்சி இலக்கணத்திலும் ஏற்பட்டு வருகின்றன என்பதும் தெரியவருகின்றன.

    • இவற்றோடு மரபிலக்கணப்படி புணர்ச்சி விதிகள் அமைக்கப்பட்டன என்பதும், அவ்விதிகளில் சில தற்காலச் சூழலில் சிறிது சிறிதாக வழக்கொழிய ஆரம்பித்துள்ளன என்ற செய்தியும், புதிய புணர்ச்சி விதிகள் சில தோன்றி நிலைபெறத் தொடங்கின என்பதும் நமக்கு இப்பாடத்தின் மூலம் தெரியவருகின்றன.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 06:06:42(இந்திய நேரம்)