தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

- பழங்காலக் கட்டடக் கலை

  • பாடம் - 1

    D05111 : பழங்காலக் கட்டடக் கலை
    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

        கட்டடம், கட்டிடம் ஆகியவற்றுக்கு விளக்கம் தருகிறது. கட்டடக் கலைக் கொள்கையைப் புரிந்து கொள்ளத் துணை செய்கிறது.

        தமிழ்ப் பண்பாட்டிற்கேற்ப ஐந்திணைக்குரிய நிலப்பகுதியில் மக்கள் வாழும் இடங்களை விளக்குகிறது.

        கட்டடக் கலை வரலாற்றுக்கு அடிப்படையான நகர அமைப்பையும், அதன் வகைகளையும் கூறுகிறது.

        மதுரை, புகார் காஞ்சிபுரம் ஆகிய நகரங்களைப் பெருமை கொள்ளச் செய்த கட்டடங்களைப் பற்றிய சில விவரங்கள் தருகின்றது.

        பண்டைய சங்க கால மக்கள் தமக்காகக் கட்டிக் கொண்ட வீடுகளைக் குறித்த செய்திகளைக் கூறுகின்றது.

        நாட்டுப் பாதுகாப்பிற்கான அரண்கள், மன்னரின் அரண்மனை பற்றிய சில செய்திகளைக் குறிப்பிடுகின்றது.

         அரசர்களின் படைக் கருவிகள் பாதுகாத்து வைத்தற்குரிய இடங்கள் பற்றியும் தெரிவிக்கின்றது.

        கடலில் செல்லும் மரக்கலம் கரைக்கு வருவதற்கு உதவும் கலங்கரைவிளக்கம் பற்றிப் பேசுகிறது.

        தமிழகத்தின் நீர் மலோண்மையை எடுத்துக்காட்டுகிறது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    • பழங்காலத் தமிழகத்தின் கட்டடக் கலை குறித்து அறிந்து கொள்ளலாம்.

    • பழந்தமிழ் நாட்டு மக்கள் தாங்கள் வாழ்ந்த நிலங்களுக்கு ஏற்பத் தங்களுக்குக் கட்டிக் கொண்ட வீடுகள் / இருப்பிடங்கள் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

    • கட்டடக் கலை வரலாறு குறித்து விளங்கிக் கொள்ள முடியும்.

    • பழைய காலத்தில் சிறந்து விளங்கிய மதுரை, புகார் நகரங்களின் கட்டடங்களைக் குறித்து அறிய வாய்ப்புக் கிட்டுகின்றது.

    • மேலும் அரண்கள், படைக்கருவிகளின் பாதுகாப்பு இடங்கள் குறித்தும் அறிந்து கொள்ள முடியும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 06:39:33(இந்திய நேரம்)