தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

பிற கிறித்தவக் காப்பியங்கள்

  • பாடம் - 3

    A01133 பிற கிறித்தவக் காப்பியங்கள்

    E

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    இரட்சணிய யாத்திரிகம், தேம்பாவணி ஆகிய இரண்டும் மக்களிடம் செல்வாக்குப் பெற்ற காப்பியங்கள். இவ்விரண்டு காப்பியங்களைத் தவிரவும் வேறு பல கிறித்தவக் காப்பியங்களும் படைக்கப்பெற்றுள்ளன. அவற்றுள், திருவாக்குப் புராணம், கிறிஸ்து மான்மியம், திருஅவதாரம், சுடர்மணி, இயேசு காவியம் ஆகிய ஐந்து காப்பியங்களைப் பற்றிய செய்திகளை இந்தப் பாடம் கூறுகிறது. இதில் காப்பியங்களை இயற்றிய ஆசிரியர்களைப் பற்றிய செய்திகளும், காப்பியங்களின் அமைப்பும், காப்பியக் கதை மாந்தர்களின் இயல்பும், காப்பியங்களில் இடம்பெற்றுள்ள விவிலியச் செய்திகளும் கூறப்பட்டுள்ளன.


    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    • மக்களிடையே பெரிதும் அறிமுகம் ஆகாத சில கிறித்தவக் காப்பியங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

    • காப்பியங்களில் இடம்பெற்றிருக்கும் விவிலியச் செய்திகளைப் பட்டியலிடலாம்.

    • இயேசு காவியத்தின் தனிச்சிறப்பை இனங் காணலாம்.

    • காப்பிய ஆசிரியர்களின் வருணனைத் திறனைத் தெரிந்து கொள்ளலாம்.

    • காப்பியங்களிலுள்ள தனித்தமிழ்ச் சொற்களையும், சந்த நயங்களையும் அறிந்து கொள்ளலாம்.

    • கிறித்தவக் காப்பியங்கள் தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தின என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 25-07-2017 11:22:32(இந்திய நேரம்)