தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tamil Education On The Web-மொழிபெயர்ப்பும் விளைவுகளும்

  • பாடம் - 5

    P20125 மொழிபெயர்ப்பும் விளைவுகளும்

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    மொழிபெயர்ப்புகளால் தமிழ்மொழி இலக்கியம், இயக்கங்கள், அறிவியல், ஆய்வுகள், சட்டத்துறை, ஆட்சித்துறை, இதழியல்துறை எனப் பல்வேறு துறைகளில் ஏற்பட்ட விளைவுகளை விளக்கிக் கூற முயற்சி செய்கிறது.


    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    மொழிபெயர்ப்புகளால் இலக்கியத்துறையில் புதிய புதிய இலக்கியங்கள் தோன்றுவதற்குக் காரணமான சூழலை இந்தப் பாடம் விளக்குகிறது.
    தமிழக மக்களாட்சிச் சூழலில் உருவான கட்சிகள் தங்கள் கொள்கைகளுக்கும் வலிமை சேர்க்கும் வகையில் மொழிபெயர்ப்புகள் பயன்பட்டுள்ள தன்மையை அறியலாம்.
    இலக்கிய ஆய்வுச் சூழலில் தற்கால ஆய்வுகளுக்குக் காரணமான அணுகுமுறைகளான அமைப்பியல், பின் அமைப்பியல், நவீனத்துவம், பின் நவீனத்துவம் போன்ற அயல்நாட்டுச் சிந்தனைகளைப் பயன்படுத்த மொழிபெயர்ப்புகள் எவ்வாறு பயன்படுகின்றன என்பதை அறிய முடியும்.
    தமிழகக் கல்விச் சூழலில் அறிவியல் கல்வியை மாணவர்கள் பெறுவதற்கு மொழிபெயர்ப்புகள் எவ்வாறு பயன்பட்டன; தற்காலத்தில் அறிவியல் ஆய்வுகளுக்கு மொழிபெயர்ப்புகள் எவ்வாறு பயன்படுகின்றன என்பதை அறியலாம்.
    பாமர மக்கள் சட்டம், ஆட்சி போன்ற துறைகளோடு நெருங்குவதற்கு மொழிபெயர்ப்புகள் பயன்படும் வகையை அறியலாம்.
    இதழியல் துறையும் இலக்கிய மொழிபெயர்ப்புகள் இடம்பெறும் சிற்றிதழ்களும் செய்தி மொழிபெயர்ப்பால் அடையும் பயன்களை அறியலாம்.

    பாட அமைப்பு

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 10:47:40(இந்திய நேரம்)