தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

முனைவர் இரெ. இராசபாண்டியன்

முனைவர் இரெ. இராசபாண்டியன்

இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முகிலன் குடியிருப்பு என்னும் ஊரில்04.05.1960 அன்று பிறந்தார். இவரது தந்தையார் பெயர் சு.இரெத்தினசாமி; தாயார் பெயர்இரெ.பத்மாவதி.

இவர் முகிலன் குடியிருப்பில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பதினோராம்வகுப்பு வரை படித்தார். கன்னியாகுமரிக்கு அருகில் அகத்தீசுவரத்தில் உள்ளவிவேகானந்தா கல்லூரியில் புகுமுக வகுப்பும் பி.ஏ., வகுப்பும் படித்தார். திருநெல்வேலியில்உள்ள ம.தி.தா. இந்துக் கல்லூரியில் எம்.ஏ., படித்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில்., பி.எட்., பட்டங்கள் பெற்றார். அங்குப் பயிலும் போதே மாலைநேரத்தில் பயின்று இதழியலில் சான்றிதழ் பெற்றுள்ளார். சென்னை மாநிலக் கல்லூரியில்ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். மாலை நேரங்களில் இந்தி பயின்றுதென்னிந்திய இந்தி பிரச்சார சபையில் ‘ராஷ்ட்ர பாஷா’ சான்றிதழ் பெற்றுள்ளார்.

சுமார் பன்னிரண்டு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய இவர் 1997 முதல்தமிழ்நாடு அரசு கல்லூரிகளில் தமிழ் விரிவுரையாளராகப் பணி புரிகின்றார். தற்போதுசென்னை, நந்தனத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் தமிழ் முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார்.

முகிலை இராசபாண்டியன் என்ற பெயரில் ஏழு நூல்கள் படைத்துள்ளார். தமிழ் வாரமாத இதழ்களில் சிறுகதைகள் எழுதி வருகிறார்.

இதுவரை 35 ஆய்வுக் கட்டுரைகள் படைத்துள்ளார். மனோன்மணியம் சுந்தரனார்பல்கலைக் கழகத்தின் பாரதியார், பாரதிதாசன் அறக்கட்டளைப் பரிசுகளைப் பெற்றுள்ளார்.

முன்

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2017 12:19:34(இந்திய நேரம்)