(தாள் = முயற்சி; ஆற்றி = செய்து; தக்கார் = தகுதி
உடையவர்;
வளோண்மை = நன்மை)
தனது
சுய முயற்சியினாலும், உழைப்பினாலும் கிடைத்த செல்வம்,
தகுதி உடையவர்களுக்கு உதவிகள் செய்வதற்காகவே. அச்செல்வம்
வீணாகாமல் பயன்தரும் வகையில் உதவிகள் செய்ய வேண்டும்.
தானே
முயற்சி செய்து ஈட்டிய செல்வத்தையே தக்காருக்கு
உதவுமாறு வேண்டுகிறார் வள்ளுவர். மிகவும் பக்குவமாகவும்
நுணுக்கமாகவும் இந்தக் கருத்தை வள்ளுவர் குறிப்பிடுகிறார். சிலர்,
பிறர் ஈட்டிய பொருளை எடுத்துத் தானம் செய்வார்கள். தனது
பொருள் அல்லது சேமிப்பு கொஞ்சம்கூட பாதிக்காமல், பிறர்
பொருளை எடுத்து மிகவும் தாராளமாகப் பிறருக்கு வழங்குவார்கள்.
இத்தகைய சுயநலவாதிகளைக் கண்டு அஞ்சியே வள்ளுவர், தான்
முயற்சி செய்து கிடைத்த செல்வத்தையே பிறருக்கு உதவுமாறு
வேண்டுகிறார்.
தனது
சுய முயற்சியால் பொருள் ஈட்டி, அந்தப் பொருளைத்
தக்காருக்குக் கொடுப்பவர் யார்? சான்றாண்மை கொண்ட
சான்றோர்கள். மேலும். ஒருவன் பொருள் ஈட்டுவதே பிறருக்கு
உதவி செய்வதற்குத்தான் என்றும் வள்ளுவர் சுட்டுகிறார்.
உயிரினங்களிலேயே
மனிதன் மட்டுமே தனக்கு உரிய உணவை
உற்பத்தி செய்கிறான். தான் உற்பத்தி
செய்யும் உணவு தனக்கு
மட்டும் அல்லாமல் பிறருக்கும் பயன்படும வகையிலும் உற்பத்தி
செய்கின்றான். அதைப்போலத்தான் தான் ஈட்டும் பொருள்
தனக்கு மட்டுமல்ல அது பிறருக்கும் பயன்படவேண்டும் என்று
குறிப்பிடுகிறார் வள்ளுவர். தான் ஈட்டிய பொருளைத் தகுதி
வாய்ந்த பிறருக்கு உதவுகின்ற சான்றாண்மையைப் பண்பு
சான்றோர்க்கு உரியது என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர்.
|