சொல்
பொது அறிமுகம்
General Introduction
அன்புள்ள மாணவர்களே!
எழுத்துகள் பற்றி முன்பாடத்தில் படித்தோம். எழுத்துகள் ஒன்று சேர்ந்தால் சொல் கிடைக்கும். அந்தச் சொற்கள் ஒன்று சேர்ந்தால் தொடர் கிடைக்கும். தொடர்கள் ஒன்று சேர்ந்தால் ஒரு பெரிய புத்தகமே நமக்குக் கிடைத்து விடும்.
எழுத்தின் அடுத்த நிலை சொல். சொல் பற்றிய செய்திகளை இந்தப் பாடம் அறிமுகம் செய்கிறது.