சொல்

எழுத்து

பயிற்சி - 4
Exercise 4


IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1.  மூன்று காலங்கள் எவை?

இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவை மூன்று காலங்களாகும்.

2.  எதிர்காலம் என்பது என்ன?

ஒரு செயல் நடக்கப் போவதை உணர்த்துவது எதிர்காலம் எனப்படும்.

3.  நிகழ்காலம் என்பது என்ன?

ஒரு செயல் நடந்து கொண்டிருப்பதை உணர்த்துவது நிகழ்காலம் எனப்படும்.

4.  இறந்தகாலம் என்பது என்ன?

ஒரு செயல் நடந்து முடிந்ததை உணர்த்துவது இறந்தகாலம் எனப்படும்.

5.  தன்மை இடம் என்பது என்ன?

தன்னைப் பற்றியோ அல்லது தம்மைப் பற்றியோ குறிப்பது தன்மை இடம் எனப்படும்.

6.  படர்க்கை இடம் என்பது என்ன?

தன்னைப் பற்றியும் பிறரைப் பற்றியும் குறிக்காமல் எங்கோ இருப்பவரைக் குறிப்பது படர்க்கை இடம் எனப்படும்.

7.  முன்னிலை இடம் என்பது என்ன?

முன்னால் இருப்பவரைக் குறிப்பது முன்னிலை இடம் எனப்படும்.

8.  காலம் எத்தனை வகைபெறும்?

காலம் மூன்று வகைபெறும்.

9.  பால் எத்தனை வகைபெறும்?

பால் ஐந்து வகைபெறும்.

10.  திணை எத்தனை வகைபெறும்?

உயர்திணை, அஃறிணை எனத் திணை இருவகைபெறும்.