சொல்
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. மக்கள், தேவர் -------------- திணை.
மக்கள், தேவர் உயர் திணை.
2. மரம், மரங்கள் -------------.
மரம், மரங்கள் அஃறிணை.
3. இளங்கோ -------- பால்.
இளங்கோ ஆண் பால்.
4. செல்வி -------- பால்.
செல்வி பெண் பால்.
5. மரங்கள் ---------- பால்.
மரங்கள் பலவின் பால்.
6. வளர்கிறாள் - இச்சொல் சுட்டுவது ....................... காலம்.
வளர்கிறாள் - இச்சொல் சுட்டுவது நிகழ் காலம்.
7. செயல் நடைபெறப் போவதைக் கூறும் காலம் ......................
செயல் நடைபெறப் போவதைக் கூறும் காலம் எதிர்காலம்
8. தன்மை, முன்னிலை .................................. என இடம் மூன்று வகைப் படும்.
தன்மை, முன்னிலை படர்க்கை என இடம் மூன்று வகைப் படும்.
9. பால் ...................................... வகைப்படும்.
பால் ஐந்து வகைப்படும்.
10. ஆண்கள் என்பது ........................ திணை ஆகும்.
ஆண்கள் என்பது உயர் திணை ஆகும்.