சொல்

சொல்

பயிற்சி - 3
Exercise 3


III. கீழ்க்காணும் வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Choose the right answer for the following questions. For answers, press the answer button.

1. பழம் என்பது ஒரு பொருளைக் குறிப்பதால் அதனை என்ன என்று சொல்லலாம்?

அ) திணை

ஆ) சொல்

இ) பால்

ஈ) எண்

ஆ) சொல்

2.  ஒருமை, பன்மை என்பன எதன் வகைகள்?

அ) திணை

ஆ) சொல்

இ) பால்

ஈ) எண்

ஈ) எண்

3.  உயர்திணை, அஃறிணை என்பன எதன் வகைகள்?

அ) திணை

ஆ) சொல்

இ) பால்

ஈ) எண்

அ) திணை

4.  ஆண்பால், பெண்பால், பலர்பால் ஆகியன எதில் அடங்கும்?

அ) உயர்திணையில்

ஆ) அஃறிணையில்

இ) எண்ணில்

ஈ) இடத்தில்

அ) உயர்திணையில்

5.  பலவின் பால், ஒன்றன்பால் ஆகியன எதில் அடங்கும்.

அ) உயர்திணையில்

ஆ) அஃறிணையில்

இ) எண்ணில்

ஈ) இடத்தில்

ஆ) அஃறிணையில்

6.  தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகியன எதன் வகைகள்?

அ) திண

ஆ) எண்

இ) இடம்

ஈ) பால்

இ) இடம்

7.  நீ என்பதன் பன்மைச் சொல் எது?

அ) அவர்கள்

ஆ) இவர்கள்

இ) நீவிர்

ஈ) நீங்கள்

ஈ) நீங்கள்

8.  ‘நான்’ எவ்விடத்தைக் குறிக்கும்?

அ) முன்னிலை

ஆ) தன்மை

இ) படர்க்கை

ஈ) பொதுவிடம்

ஆ) தன்மை

9.  சொல் என்பது எதனைக் கொண்டது?

அ) பொருள்

ஆ) எழுத்துகள்

இ) திணை

ஈ) காலம்

ஆ) எழுத்துகள்

10.  பதம் என்பதன் பொருள் என்ன?

அ) பக்குவம்

ஆ) சொல்

இ) தொடர்

ஈ) வரி

(ஆ) சொல்