புணர்ச்சி
பாட அறிமுகம்
Introduction to Lesson
நிலை மொழியும் வருமொழியும் சேரும் புணர்ச்சியை்ச் சொற்களின் பொருள் அடிப்படையில் வேற்றுமை, அல்வழி என வகைப்படுத்திக் காணுவர். நிலைமொழியில் இறுதி எழுத்தாக உயிரெழுத்து அமையும்போது மையீற்றுப் பண்புப்பெயர், உடம்படுமெய், இசைப்பெயர், குற்றியலுகரம் முதலான புணர்ச்சி வகைகளைக் குறிப்பிடுவர். அவ்வாறே நிலைமொழி இறுதியில் மெய்யெழுத்துகள் அமைவதன் ஒருவகையான ம் என்னும் மகர ஈற்றுப் புணர்ச்சி மாற்றங்கள் சில உள்ளன. இவையாவும் இப்பாடத்தில் விளக்கப் பெறும்.