புணர்ச்சி
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. நிலைமொழியும், வருமொழியும் சேர்வது ----------- ஆகும்.
நிலைமொழியும், வருமொழியும் சேர்வது புணர்ச்சி ஆகும்.
2. ஆடு என்பது ----------- சொல்லாகும்.
ஆடு என்பதுகுற்றியலுகரம் சொல்லாகும்.
3. நன்மை என்பது --------- பெயர்.
நன்மை என்பது பண்புப் பெயர்.
4. இளமை + குழவி = இளங்குழவி என்பதில் நிகழ்ந்த மாற்றம் --------- ஆகும்.
இளமை + குழவி = இளங்குழவி என்பதில் நிகழ்ந்த மாற்றம் இனம் மிகல் ஆகும்.
5. எட்டாம் வேற்றுமைக்கு உருபு ------------ .
எட்டாம் வேற்றுமைக்கு உருபு இல்லை.
6. பார்த்த + படம் என்பது ------------ புணர்ச்சி ஆகும்.
பார்த்த + படம் என்பது அல்வழிப் புணர்ச்சி ஆகும்.
7. அது என்பது ----------- ஆகும்.
அது என்பது ஆறாம் வேற்றுமை உருபு ஆகும்.
8. நிலைமொழியில் ----------- என்னும் உயிர் வரும்போது ய், வ் இரண்டும் உடம்படுமெய்யாக வரும்.
நிலைமொழியில் ஏ என்னும் உயிர் வரும்போது ய், வ் இரண்டும் உடம்படுமெய்யாக வரும்.
9. கிழக்கு + வானம் என்பது ----------- என வரும்.
கிழக்கு + வானம் என்பது கீழ்வானம்என வரும்.
10. மரம் + கலம் என்பது ----------- என்று சேரும்.
மரம் + கலம் என்பது மரக்கலம் என்று சேரும்.