15. புணர்ச்சி

புணர்ச்சி

பயிற்சி - 3
Exercise 3


III. கீழ்க்காணும் வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Choose the right answer for the following questions. For answers, press the answer button.

1.  ஐ என்பது

அ) சார்பெழுத்து

ஆ) ஐகாரக் குறுக்கம்

இ) இரண்டாம் வேற்றுமை உருபு

ஈ) முதல் நிலை எழுத்து

இ) இரண்டாம் வேற்றுமை உருபு

2.  அல்வழிப் புணர்ச்சி என்பது

அ) வேற்றுமை வருவது

ஆ) உருபு வருவது

இ) இரு சொற்கள் சேர்வது

ஈ) வேற்றுமைப் பொருள் அல்லாதது

ஈ) வேற்றுமைப் பொருள் அல்லாதது

3.  மரம் + கிளை என்பது

அ) மரம்கிளை என்று ஆகும்

ஆ) மரக்கிளை என்று ஆகும்.

இ) மரங்கிளை என்று ஆகும்.

ஈ) மரகிளை என்று ஆகும்.

ஆ) மரக்கிளை என்று ஆகும்.

4.  கிளி + ய் + அழகு = கிளியழகு - எடுத்துக்காட்டில் ய் என்பது

அ) மெய்யெழுத்து

ஆ) நடு எழுத்து

இ) ஒற்றெழுத்து

ஈ) உடம்படுமெய்

ஈ) உடம்படுமெய்

5.  மெய்யீற்றுப் பண்புப் பெயரில் ----------

அ) நிலைமொழி இறுதியில் மை வரும்

ஆ) நிலைமொழி இடையில் மை வரும்

இ) நிலைமொழி முதலில் மை வரும்

ஈ) வருமொழி இறுதியில் மை வரும்

அ) நிலைமொழி இறுதியில் மை வரும்

6.  கரு + அன் என்பது =

அ) கருவன் என்று ஆகும்

ஆ) கரியன் என்று ஆகும்

இ) கரிஅன் என்று ஆகும்

ஈ) கருஅன் என்று ஆகும்

ஆ) கரியன் என்று ஆகும்

7.  ஆதிநீடல் என்பது

அ) முதல் எழுத்துக் குறைதல்

ஆ) முதல் எழுத்து நீளுதல்

இ) ஆதி என்பது நீளுதல்

ஈ) இறுதி எழுத்து நீளுதல்

ஆ) முதல் எழுத்து நீளுதல்

8.  மேற்கு + நாடு என்பது

அ) மேற்கு நாடு என்று வரும்

ஆ) மேற்கேநாடு என்று வரும்

இ) மேல்நாடு என்று வரும்

ஈ) மே நாடு என்று வரும்

இ) மேல்நாடு என்று வரும்

9.  கண் + இரண்டு = கண்ணிரண்டு என்பது

அ) மெய் குறைந்துள்ளது

ஆ) இயல்பாக உள்ளது

இ) நீண்டு ஒலிக்கிறது

ஈ) மெய் இரட்டித்துள்ளது

ஈ) மெய் இரட்டித்துள்ளது

10.  மரம் + அடி = மரவடி என்பதில்

அ) உடம்படுமெய் வந்துள்ளது

ஆ) உயிர் வரவில்லை

இ) நீண்டு ஒலிக்கிறது

ஈ) மெய் இரட்டித்துள்ளது

அ) உடம்படுமெய் வந்துள்ளது