அணி
மையக் கருத்து
Central Idea
இப்பாடத் தொகுப்பில் நாம் ஒன்பது வகையான அணிகளை உரிய விளக்கங்களுடன் கற்றுணர்ந்தோம். அவை, கவிஞன் உணர்த்தும் செய்தியை எளிதாகவும், அழகாகவும், வெளிப்படுத்தி நிற்கின்றன என்பதையும் அறிந்தோம். சிலசமயம் இல்லாத பொருள்களை எடுத்துக்காட்டுவதும் தன் விருப்பத்தைப் பொருளின் மீது ஏற்றிக் கூறுவதும், பொய்யாகப் புகழ்வதும் ஒருவகை அணி அழகாக அமைந்திருப்பதை இப்பாடம் நமக்கு இனிது விளக்குகின்றது.