அணி
பொது அறிமுகம்
General Introduction
அன்புள்ள மாணவர்களே! வணக்கம்
எழுத்துகள் சேர்ந்து பொருள் தருவது சொல்லாகிறது. அச்சொற்களைப் பொருத்தமான முறையில் அமைத்துப் பாடுவதே செய்யுள். அச்செய்யுளுக்குரிய இலக்கணங்கள் யாப்பு என்னும் வகைபெறும் என்பதனை முந்தைய பாடத்தில் அறிந்தீர்கள். அவ்வாறு யாப்புநெறி முறைப்படி உருவாக்கப்பெறும் பாடல்களில் புலவர்கள் இடையிடையே தங்கள் கற்பனைத் திறனை இணைத்துப் பாடுவர். அதன் மூலம் பாடலுக்கு அழகைச் சேர்ப்பர். அது கருத்தை எளிதில் புரிந்து கொள்ளவும் உதவும். ஆடவரும், பெண்டிரும், அணியும் அணிகலன்கள் அவரவர்க்கு அழகைச் சேர்ப்பன. அவ்வாறே செய்யுளிலும் புலவர்கள் சேர்க்கும் அழகுக்கு அணி என்று பெயர். அத்தகு அணி இலக்கணத்தை இப்பாடப்பகுதியில் கண்டு உணரலாம்.