அணி
பாட அறிமுகம்
Introduction to Lesson
செய்யுள் இயற்றும் புலவர்கள் பொருளை எளிதில் புரிய வைப்பதற்காகவும் அழகுச் சேர்ப்பதற்காகவும் அணி என்னும் அமைப்பினைப் பயன்படுத்துகின்றனர். அவ்வாறு தமிழில் பழங்காலந் தொட்டுப் புலவர்கள் அமைத்திருக்கும் அணி அழகுகளைத் தொகுத்து வகைபடுத்தி இலக்கணம் வகுத்துள்ளனர். அதற்கு அலங்காரம் அல்லது அணி என்று பெயர். தண்டி அலங்காரம், மாறன் அலங்காரம் முதலானவை குறிப்பிடத்தக்கவை. அத்தகு அணி இலக்கண நூல்களின் அடிப்படையில் நிரல்நிறை, பின்வருநிலை, ஏகதேச உருவகம், தற்குறிப்பேற்றம், இல்பொருள் உவமை, வஞ்சப்புகழ்ச்சி, பிறிதுமொழிதல், இரட்டுறமொழிதல், வேற்றுமை என்னும் அணி நலன்களைப் பற்றிய இலக்கணங்களை இனிக் காண்போம்.