17. அணி

அணி

பயிற்சி - 3
Exercise 3


III. கீழ்க்காணும் வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Choose the right answer for the following questions. For answers, press the answer button.

1.  அணி என்பதன் வேறுபெயர்

அ) அலங்காரம்

ஆ) அற்புதம்

இ) இலக்கணம்

ஈ) யாப்பு

அ) அலங்காரம்

2.  அன்புக்கும் அறத்திற்கும் நிரல்

அ) அறம் அன்பு

ஆ) அன்பு பண்பு

இ) அறம் பயன்

ஈ) பண்பு பயன்

ஈ) பண்பு பயன்

3.  பின்வரு நிலை அணி

அ) இரண்டு வகைபெறும்.

ஆ) மூன்று வகைபெறும்.

இ) நான்கு வகைபெறும்.

ஈ) ஐந்து வகைபெறும்.

ஆ) மூன்று வகைபெறும்

4.  ஏகதேசம் என்றால்

அ) மறுபக்கம்

ஆ) இருபக்கம்

இ) அடுத்த பக்கம்

ஈ) ஒரே பக்கம்

ஈ) ஒரே பக்கம்

5.  சான்றாண்மையின் தூண்கள்

அ) மூன்று

ஆ) நான்கு

இ) ஐந்து

ஈ) ஆறு

இ) ஐந்து

6.  காற்றில் கொடி அசைவது

அ) செயற்கை

ஆ) இயற்கை

இ) கற்பனை

ஈ) பொய்யானது

ஆ) இயற்கை

7.  பிறை கவ்வி மலை நடக்கும் என்பது

அ) ஏகதேச உருவக அணி

ஆ) பிறிதுமொழிதல் அணி

இ) தற்குறிப்பு ஏற்ற அணி

ஈ) இல் பொருள் உவமையணி

ஈ) இல்பொருள் உவமையணி

8.  வஞ்சப்புகழ்ச்சி என்பது

அ) நேருக்கு நேர் புகழ்வது

ஆ) புகழ்வது போல இகழ்வது

இ) புகழ்ந்தால் மகிழ்வது

ஈ) புகழ்ந்தால் வருந்துவது

ஆ) புகழ்வது போல இகழ்வது

9.  உண்மையைக் கூறாமல் உவமையை மட்டும் கூறுவது

அ) பிறிதுமொழிதல் அணி

ஆ) உருவக அணி

இ) தற்குறிப்பேற்ற அணி

ஈ) இல் பொருள் உவமையணி

அ) பிறிதுமொழிதல் அணி

10.  வேற்றுமை அணி என்பது

அ) ஒன்றை மட்டும் கூறுவது

ஆ) ஒன்றுபடுத்திப் பிறகு வேறுபடுத்துவது

இ) ஒன்றை ஒன்று வேறுபடுத்துவது

ஈ) வேற்றுமையை மட்டும் கூறுவது

ஆ) ஒன்றுபடுத்திப் பிறகு வேறுபடுத்துவது