17. அணி

அணி

பயிற்சி - 2
Exercise 2


II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1.  தண்டியலங்காரம் என்பது----------- நூல் ஆகும்.

தண்டியலங்காரம் என்பது அணி இலக்கண நூல் ஆகும்.

2.  சான்றோர்க்குப் ----------- விளக்கே விளக்கு.

சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு.

3.  சொல் மட்டும் திரும்பத் திரும்ப வருவது --------- ஆகும்.

சொல் மட்டும் திரும்பத் திரும்ப வருவது சொல் பின்வரு நிலையணி ஆகும்.

4.  சான்றாண்மையைக் கட்டிடமாகக் கூறாதது --------- ஆகும்.

சான்றாண்மையைக் கட்டிடமாகக் கூறாதது ஏகதேச உருவகம் ஆகும்.

5.  கொடிகள் ------------ போல இருந்தன என்பது தற்குறிப்பேற்றம் ஆகும்.

கொடிகள் கைகளைப் போல இருந்தன என்பது தற்குறிப்பேற்றம் ஆகும்.

6.  தண்ணீருக்குள் பூ வெந்து போனது என்பது ------------ உவமை ஆகும்.

தண்ணீருக்குள் பூ வெந்து போனது என்பது இல்பொருள் உவமை ஆகும்.

7.  தேவர் அனையர் கயவர் என்பது -------- ஆகும்.

தேவர் அனையர் கயவர் என்பது வஞ்சப்புகழ்ச்சி அணி ஆகும்.

8.  பிறிதுமொழிதல் அணியில் உணர்த்தவரும் -----------------க் கூறமாட்டார்கள்.

பிறிதுமொழிதல் அணியில் உணர்த்தவரும் உண்மையைக் கூறமாட்டார்கள்.

9.  ஒரு சொல் மூலம் -------- பொருள் தருவதே இரட்டுறமொழிதல்.

ஒரு சொல் மூலம் இரு பொருள் தருவதே இரட்டுறமொழிதல்.

10.  தீயும், கடுஞ்சொல்லும் ------------.

தீயும், கடுஞ்சொல்லும் சுடும்.