எழுத்து - சொல்
பாட அறிமுகம்
Introduction to Lesson
அயலகத்திலிருந்து அன்னைத் தமிழ் கற்கும் அன்பு மாணவ மாணவியரே ! வணக்கம் ! வாழிய நலம் !
முன் வகுப்பில் கற்ற இலக்கணப் பகுதிகளை மீண்டும் நெஞ்சில் நிறுத்தி நினைவில் அசைபோடுங்கள் !
இலக்கு + அண் + அம் = இலக்கணம்.
மொழியைக் கற்றுக் கொள்ளும் இலக்கினை அடைய உதவுவது இலக்கணம். பிழையறப் பேசுதல், பிழையற எழுதுதல் ஆகியவை மொழி கற்றலின் இலக்கு.
எழுத்து, சொல், பொருள், யாப்பு அணி - தமிழ் இலக்கணப் பிரிவுகள்.

ஒலிக்க வேண்டிய கால அளவு
குறில் - 1 மாத்திரை
நெடில் - 2 மாத்திரை
மெய்யெழுத்துகள் - 1/2 மாத்திரை
எழுத்தை ஒலிக்க வேண்டிய கால அளவினை மாத்திரை என வழங்குவர்.
கண் இமைப்பதற்கும், விரலை நொடிப்பதற்கும் உரிய கால அளவு மாத்திரை.