13. எழுத்து - சொல்

எழுத்து - சொல்

பயிற்சி - 3
Exercise 3


III. கீழ்க்காணும் வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Choose the right answer for the following questions. For answers, press the answer button.

1.  மெய்யெழுத்தினை ஒலிப்பதற்கு உரிய கால அளவு

அ) 1 மாத்திரை

ஆ) 1 1/2 மாத்திரை

இ) 2 மாத்திரை

ஈ) 1/2 மாத்திரை

ஈ) 1/2 மாத்திரை

2. “குங்குமம்” என்னும் சொல்

அ) இயற்சொல்

ஆ) திரிசொல்

இ) வடசொல்

ஈ) திசைச்சொல்

இ) வடசொல்

3.  திருக்குறளில் கல்வி அதிகாரம் படித்தாயா? என ஆசிரியர், மாணாக்கரை வினவுவது

அ) ஐயவினா

ஆ) அறிவினா

இ) ஏவல்வினா

ஈ) அறியாவினா

இ) ஏவல் வினா

4.  “மலை ஏறுவாயோ?” என்னும் வினாவுக்கு, “கால் வலிக்கும்” என்று விடை கூறுவது

அ) உறுவது கூறல்

ஆ) உற்றது உரைத்தல்

இ) எதிர் வினாதல்

ஈ) இனமொழி

அ) உறுவது கூறல்

5.  பொருள்கோளின் வகை

அ) ஐந்து

ஆ) ஏழு

இ) ஆறு

ஈ) எட்டு

ஈ) எட்டு

6.  நான்காம் வேற்றுமை உருபு

அ) ஐ

ஆ) ஆன்

இ) கு

ஈ) கண்

இ) கு

7.  விளி வேற்றுமை என்று பெயர் வழங்குவது

அ) ஆறாம் வேற்றுமை

ஆ) ஏழாம் வேற்றுமை

இ) எட்டாம் வேற்றுமை

ஈ) முதல் வேற்றுமை

இ) எட்டாம் வேற்றுமை

8.  “வற்றல் எனக்குப் பிடித்த உண்பொருள்” என்பது

அ) பொருளாகு பெயர்

ஆ) தொழிலாகு பெயர்

இ) இடவாகு பெயர்

ஈ) காலவாகு பெயர்

ஆ) தொழிலாகு பெயர்

9.  'வாழ்க' என்ற சொல்லில் விகுதி எது?

அ) வாழ்

ஆ) வா

இ) க

ஈ) வாக

இ) க

10.  இறந்தகாலங் காட்டும் இடைநிலைகள் யாவை ?

அ) கிறு, கின்று, ஆநின்று

ஆ) ப், வ்

இ) த், ட் ,ற், ன்

ஈ) அ ,ஆல் ,இல்

இ) த், ட் ,ற், ன்