எழுத்து - சொல்
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. மொழி கற்றுக் கொள்ளும் இலக்கினை அடைய உதவுவது -------.
மொழி கற்றுக் கொள்ளும் இலக்கினை அடைய உதவுவது இலக்கணம்
2. நெடில் எழுத்தை ஒலிப்பதற்குரிய கால அளவு -------.
நெடில் எழுத்தை ஒலிப்பதற்குரிய கால அளவு 2 மாத்திரை.
3. “ஆலயம் தொழுவது சாலவும் நன்று” - இத்தொடரில் உள்ள “சால” என்பது ------------.
“ஆலயம் தொழுவது சாலவும் நன்று” - இத்தொடரில் உள்ள “சால” என்பது உரிச்சொல்
4. பகுபத உறுப்புகள் மொத்தம் ---------.
பகுபத உறுப்புகள் மொத்தம் ஆறு
5. திரிசொல் என்பது ------------ சொல்.
திரிசொல் என்பது இலக்கிய வகை சொல்
6. செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆறிரையும் தெளிவாக உணர்த்துவது -----------,
செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆறிரையும் தெளிவாக உணர்த்துவது தெரிநிலை வினைமுற்று,
7. வினா -------- வகைப் பெறும்.
வினா ஆறு வகைப் பெறும்.
8. விடை ------------ வகைப் பெறும்.
விடை எட்டு வகைப் பெறும்.
9. செய்யுளின் இறுதிச் சொல்லை முதற்சொல்லோடு சேர்த்துப் பொருள் கொள்ளுதல் -------------.
செய்யுளின் இறுதிச் சொல்லை முதற்சொல்லோடு சேர்த்துப் பொருள் கொள்ளுதல் பூட்டுவிற்பொருள்கோள்.
10. “என்னே! தமிழின் இனிமை! என்று கூறுவது --------- வாக்கியம்.
“என்னே! தமிழின் இனிமை! என்று கூறுவது உணர்ச்சி வாக்கியம்