அணி
பயிற்சி - 4
Exercise 4
1. அணி என்றால் என்ன?
செய்யுளில் வரும் சொல்லும் பொருளும் அழகுற நின்று செய்யுளுக்கு அழகு தருவது அணி எனப்பெறும்.
2. அணி எத்தனை வகைபெறும்? அவை யாவை?
அணி இரண்டு வகைபெறும். அவை (1) சொல்லணி, (2) பொருளணி.
3. பொருளணியின்பாற்படும் நான்கு அணிகளின் பெயர் தருக.
(1) தற்குறிப்பேற்றம், (2) இரட்டுறமொழிதல் (3) உவமை, (4) உருவகம்
4. இரட்டுறமொழிதல் அணியின் மற்றொரு பெயர் யாது?
இரட்டுறமொழிதல் அணியின் மற்றொரு பெயர் சிலேடையணி.
5. சொற்பொருட் பின்வருநிலையணி என்றால் என்ன?
ஒரு செய்யுளில் வந்த சொல்லே வந்து, தந்த பொருளைத் தருவது சொற்பொருட் பின்வருநிலையணியாகும்.
6. இரட்டுற மொழிதல் அணி எவ்வாறு அமையும்?
ஒரு செய்யுளில், ஒரு சொல் அல்லது ஒரு தொடர் இருபொருள் தருமாறு அமைவது இரட்டுற மொழிதல் அணி.
7. “வாரல் என்பது போல் மறித்துக் கை காட்ட” - இதில் வந்துள்ள அணி யாது?
“வாரல் என்பது போல் மறித்துக் கை காட்ட” - இதில் வந்துள்ள அணி தற்குறிப்பேற்ற அணி.
8. “பெரிதினிது பேதையார் கேண்மை” - இதன்கண் வந்துள்ள அணி யாது?
“பெரிதினிது பேதையார் கேண்மை” - இதன்கண் வந்துள்ள அணி வஞ்சப்புகழ்ச்சி அணி.
9. “கோவளர்ப்ப கோ நகரங்களே” - இப்பாடலடியில் வந்துள்ளது எந்த அணி?
“கோவளர்ப்ப கோ நகரங்களே” - இப்பாடலடியில் வந்துள்ளது மடக்கு அணி.
10. பிறிதுமொழிதல் அணி என்றால் என்ன?
தாம் வலியுறுத்தவந்த கருத்தை நேரடியாகக் கூறாது, பிறிதொன்றைக் கூறி வலியுறுத்தும் அணி, பிறிதுமொழிதல் அணி ஆகும். .