அணி
பொது அறிமுகம்
General Introduction
அன்புள்ள மாணவர்களே! வணக்கம்
அணி என்னும் சொல்லுக்கு அழகு என்பது பொருள். மகளிர் பெரிதும் விரும்பும் அணிகள், தாம் அழகாய் அமைவதுடன் தம்மை அணிபவருக்கு மேலும் அழகு தருதலின் அப்பெயர் பெற்றன. அதுபோலச் செய்யுளில் வரும் சொல்லும், பொருளும் அழகுற நின்று அச்செய்யுளை மேலும் அழகுபெறச் செய்தலின் அது அணி என்று வழங்கப் பெறுகிறது. சிலவகை அணிகள் குறித்து இப்பாடத்தில் கற்க இருக்கின்றீர்கள்.