16. அணி

அணி

பயிற்சி - 3
Exercise 3


III. கீழ்க்காணும் வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Choose the right answer for the following questions. For answers, press the answer button.

1.  அணி என்னும் சொல்லின் பொருள்

அ) பழகு

ஆ) அழகு

இ) இன்பம்

ஈ) இசை

ஆ) அழகு

2.  அணியின் வகை

அ) ஒன்று

ஆ) இரண்டு

இ) மூன்று

ஈ) நான்கு

ஆ) இரண்டு

3.  செய்யுளில் ஒரு சொல் அல்லது தொடர் தனித்து நின்று இரண்டு பொருள் தருவது

அ) சிலேடை

ஆ) செம்மொழிச் சிலேடை

இ) பிரிமொழிச் சிலேடை

ஈ) மடக்கு

ஆ) செம்மொழிச் சிலேடை

4.  “செய்யுட் கிடைமறிக்கும் ------ என்று தொடங்கும் பாடலில் சிலேடையாக அமைந்தவை

அ) பாம்பு - எள்

ஆ) ஆடு - கதவு

இ) வைக்கோல் - யானை

ஈ) சோலை - அரசன்

ஆ) ஆடு - கதவு

5.  பின்வருநிலையணியின் வகை

அ) ஒன்று

ஆ) இரண்டு

இ) மூன்று

ஈ) ஐந்து

இ) மூன்று

6.  “வாரல் என்பது போல் மறித்துக் கை காட்ட” - இச்செய்யுளடியில் வந்துள்ள அணி

அ) இரட்டுறமொழிதல்

ஆ) வஞ்சப்புகழ்ச்சி

இ) பிறிதுமொழிதல்

ஈ) தற்குறிப்பேற்றம்

ஈ) தற்குறிப்பேற்றம்

7.  சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல் - இக்குறட்பாவில் வந்துள்ள அணி

அ) சொல்பின்வருநிலை

ஆ) பொருள்பின்வருநிலை

இ) சொற்பொருள் பின்வருநிலை

ஈ) மடக்கு

இ) சொற்பொருள் பின்வருநிலை

8.  பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண் பீழை தருவதொன்று இல்” - இக்குறட்பாவில் வந்துள்ள அணி

அ) வஞ்சப்புகழ்ச்சி

ஆ) சிலேடை

இ) உவமை

ஈ) உருவகம்

அ) வஞ்சப்புகழ்ச்சி

9.  பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்.” - இக்குறட்பாவில் இடம் பெற்றுள்ள அணி

அ) இரட்டுறமொழிதல்

ஆ) தற்குறிப்பேற்றம்

இ) பிறிதுமொழிதல்

ஈ) வேற்றுமை

இ) பிறிதுமொழிதல்

10.  உள்ளம் உடைமை உடைமை; பொளுடைமை நில்லாது நீங்கி விடும் - இக்குறட்பாவில் உள்ள அணி

அ) பொருள் பின்வருநிலை

ஆ) சொற்பொருட் பின்வருநிலை

இ) வஞ்சப்புகழ்ச்சி

ஈ) சொல்பின்வருநிலை

ஈ) சொல்பின்வருநிலை