பொது
பயிற்சி - 4
Exercise 4
1. எழுதுமுறைகளுள் மிகவும் கவனிக்கத்தக்கன யாவை?
எழுதும் முறைகளுள் மிகவும் கவனிக்கத்தக்கன, இடம்விட்டு எழுதுதலும் சேர்த்து எழுதுதலும் ஆகும்.
2. சேர்த்தே எழுத வேண்டியவை இரண்டினைக் கூறுக.
சேர்த்தே எழுத வேண்டியவை
1. பண்புத்தொகை
2. வினைத்தொகை
3. செய்யுளை எழுதும்பொழுது கவனத்திற் கொள்ள வேண்டுவன யாவை?
சீரும் அடியும் பிறழாமலும் சீருக்கு இடையில் இடைவெளி விட்டும் எழுதுதல் வேண்டும்.
4. தமிழில் மயங்கொலிகள் எனப்பெறுபவை எவை? ஏன்?
ல-ள-ழ; ன-ண; ர-ற இவை மயங்கொலிகள் எனப்பெறும். இதுவோ அதுவோ என்ற மயக்கத்தைத் தரும் ஒலிகளாதலால் மயங்கொலிகள் எனப் பெறுகின்றன.
5. மரபு என்றால் என்ன?
நம் முன்னோர்கள், எப்பொருளை, எச்சொல்லால் இயம்பினரோ, அப்பொருளை அச்சொல்லால் இயம்புதல் அல்லது வழங்குதல் மரபு எனப்படும்.
6. தாவர உறுப்பு பற்றிய மரபுக்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.
தாவர உறுப்பு பற்றிய மரபுக்கு இரண்டு எடுத்துக்காட்டுகள்
1.நெல்தாள்
2.தென்னங்கீற்று
7. இருவகை வாக்கியங்கள் எவை?
கருத்துவகை வாக்கியம், அமைப்புவகை வாக்கியம் என்பனவாம்.
8. கருத்தை அடிப்படையாகக் கொண்டு பிரிக்கப் பெறும் வாக்கியங்கள் யாவை?
செய்தி வாக்கியம், வினாவாக்கியம், விழைவு வாக்கியம், உணர்ச்சி வாக்கியம் ஆகியவை கருத்தை அடிப்படையாகக் கொண்டு பிரிக்கப் பெறும் வாக்கியங்கள்.
9. அமைப்புவகை வாக்கியங்கள் எத்தனை? அவையாவை?
அமைப்புவகை வாக்கியங்கள் மூன்று. அவை, தனிவாக்கியம், தொடர்வாக்கியம், கலவை வாக்கியம் எனப்பெறும்.
10. கலவை வாக்கியம் எவ்வாறு வரும்?
“ஆண்மக்களே! பெண்ணினத்திற்கு மதிப்புக் கொடுங்கள்; உரிமை கொடுங்கள்!” - இவ்வாறு, ஒரு முதன்மை வாக்கியம் பல சார்பு வாக்கியங்களுடன் பொருந்த வருவது கலவை வாக்கியமாகும்.