18. பொது

பொது

பயிற்சி - 3
Exercise 3


III. கீழ்க்காணும் வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Choose the right answer for the following questions. For answers, press the answer button.

1.  தலைப்புகளை எழுது வேண்டிய இடம்

அ) ஓரம்

ஆ) கீழ்

இ) மையம்

ஈ) இடப்புறம்

இ) மையம்

2. ‘கழை’ - என்ற சொல்லின் பொருள்

அ) கவின்கலை

ஆ) மூங்கில்

இ) பயிர்களுக்கு இடையில் தோன்றுவது

ஈ) செடி

ஆ) மூங்கில்

3.  ‘கரி’------------ என்ற சொல்லின் பொருள்

அ) யானை

ஆ) காய்கறி

இ) மிளகு

ஈ) கூட்டு

அ) யானை

4.  ‘மாண்’ - என்பதன் பொருள்

அ) புள்ளிமான்

ஆ) பெருமை

இ) மானம்

ஈ) வானம்

ஆ) பெருமை

5.  பசுவின் இளமை மரபு பெயர்

அ) குட்டி

ஆ) குருளை

இ) பறள்

ஈ) கன்று

ஈ) கன்று

6.  நண்டுக்குரிய உறைவிட மரபு பெயர்

அ) பொந்து

ஆ) வளை

இ) கூடு

ஈ) வலை

ஆ) வளை

7.  தமிழை முறையாகப் படி. - என்று கூறுவது

அ) செய்தி வாக்கியம்

ஆ) கட்டளை வாக்கியம்

இ) உணர்ச்சி வாக்கியம்

ஈ) வினாவாக்கியம்

ஆ) கட்டளை வாக்கியம்

8.  இணையப் பல்கலைக்கழகம் தமிழக அரசால் நிறுவப் பெற்றது. - இது

அ) செயப்பாட்டு வினை

ஆ) தன்வினை

இ) செய்வினை

ஈ) எதிர்மறை வினை

அ) செயப்பாட்டு வினை

9. “தமிழின் இனிமையை ஒருவரும் மறுக்கார்.’ என்பது

அ) செய்தி வாக்கியம்

ஆ) வியப்பு வாக்கியம்

இ) உணர்ச்சி வாக்கியம்

ஈ) கட்டளை வாக்கியம்

அ) செய்தி வாக்கியம்

10.  ‘திருக்குறளில் எல்லாக் கருத்துகளும் உள.’ - இது

அ) செய்வினை

ஆ) செயப்பாட்டுவினை

இ) தன்வினை

ஈ) உடன்பாடு

ஈ) உடன்பாடு