பொது
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. பண்புத்தொகையை எழுதும் போது --------- எழுதுதல் வேண்டும்.
பண்புத்தொகையை எழுதும் போது சேர்த்து எழுதுதல் வேண்டும்.
2. சொல்லுடன் ‘கள்’ விகுதியை ------------ எழுதுதல் வேண்டும்.
சொல்லுடன் ‘கள்’ விகுதியை பிரிக்காமல் எழுதுதல் வேண்டும்.
3. செய்யுளை எழுதும் பொழுது சீரும் அடியும் ------- எழுத வேண்டும்.
செய்யுளை எழுதும் பொழுது சீரும் அடியும் பிறழாமல் எழுத வேண்டும்.
4. ல-ள-ழ; ன-ண முதலான ஒலிகள் --------- என வழங்க பெறுகின்றன.
ல-ள-ழ; ன-ண முதலான ஒலிகள் மயங்கொலிகள் என வழங்க பெறுகின்றன.
5. நம் முன்னோர் எச்சொல்லை எவ்வாறு சொன்னார்களோ, அவ்வாறே சொல்லுதல் -------- எனப் பெறும்.
நம் முன்னோர் எச்சொல்லை எவ்வாறு சொன்னார்களோ, அவ்வாறே சொல்லுதல் மரபு எனப் பெறும்.
6. சிங்கத்தின் இளமைப் பெயர் ----------- என்பதாகும்.
சிங்கத்தின் இளமைப் பெயர் சிங்கக் குருளை என்பதாகும்.
7. மயிலின் குரலை -------- என்பது மரபு.
மயிலின் குரலை அகவுதல் என்பது மரபு.
8. ‘உலகத் தமிழரே ஒன்றுபடுக!’ என்பது ---------- வாக்கியம்.
‘உலகத் தமிழரே ஒன்றுபடுக!’என்பது கட்டளை வாக்கியம்.
9. ‘குதிரைக் கொட்டில்’ என்று கூறுவது விலங்கின் ------- மரபாகும்.
‘குதிரைக் கொட்டில்’ என்று கூறுவது விலங்கின் உறைவிட மரபாகும்.
10. என்னே! தமிழின் இனிமை! என்பது ---------- வாக்கியமாகும்.
என்னே! தமிழின் இனிமை! என்பது உணர்ச்சி வாக்கியமாகும்.