Tamil Virtual Academy

TAMIL VIRTUAL ACADEMY - தமிழ் இணையக் கல்விக்கழகம்

Languages

tamilnadu_temples_new

அருள்மிகு மேல்சித்தாமூர் பார்சுவநாதர் திருக்கோயில்

  • கோவில் விவரங்கள்

  • சிறப்புகள்

  • செல்லும் வழி மற்றும் வரைபடம்

Other Names :

பார்சுவநாதர்

Place :

மேல்சித்தாமூர்

Taluk :

செஞ்சி

District :

விழுப்புரம்

Religious Type :

சமணம்-தீர்த்தங்கரர்

Lord Name :

பார்சுவநாதர்

Procession On God :

பகவான் பார்சுவநாதர்

Mother / Goddess Name :

அம்பிகா இயக்கி, பத்மாவதி, ஜ்வாலாமாலினி

Temple Tree :

Tirukkulam / River :

Agamam :

Worship Time :

Festivals :

அட்சய திரிதியை, மகாவீரர் ஜெயந்தி, தேர்த்திருவிழா, வசந்த பஞ்சமி, கார்த்திகை தீபம், ஜினராத்திரி, தீபாவளி

History :

அப்பாண்டைநாதர் உலா என்னும் சிற்றிலக்கியத்தின் மூலம் இக்கோயிலைப்பற்றி அறியலாம்.

Protecting Company :

சமண மடாலயத்தின் கீழ் வழிபாட்டில் உள்ளது.

Nearest Temples Arc :

வளத்தி காளிகாம்பாள் கோயில், வளத்தி கிருஷ்ணர் கோயில், மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில், மேல்சித்தாமூர் சமண மடம், செஞ்சிக் கோட்டை, சீயமங்கலம் பல்லவகுடைவரைக் கோயில், திருமால்பாடி கோயில்

Summary :

தமிழகத்தின் செஞ்சி வட்டம் வல்லம் அருகில் உள்ள மேல்சித்தாமூர் சமண சமயத்தின் தலைமை ஊராக இருந்து வருகின்றது. இங்குள்ள சமண மடம் ஜினகாஞ்சி மடம் என்று அழைக்கப்படுகின்றது. இவ்வூரில் பழைய சமணப்பள்ளிகளும் கோயில்களும் உள்ளன. மேல்சித்தாமூரில் உள்ள பார்சுவநாதர் கோயிலின் கருவறை, அர்த்த மண்டபம், முகமண்டபம், மானஸ்தம்பம் ஆகியவை கி.பி.16ஆம் நூற்றாண்டு கலைப்பாணியை கொண்டுள்ளது. எஞ்சியவை 19ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவையாகும். இங்குள்ள நேமிநாதர் சிற்பம் சென்னை மயிலாப்பூரில் இருந்த சமணக் கோயிலில் இருந்து எடுத்து வரப்பட்டதாகும். பார்சுவநாதர் கோயிலில் நாயக்கர் காலத்தில் வடிக்கப்பட்ட தமிழ், கன்னட வரிவடிவக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. பார்சுவநாதர் கோயில் தூண்கள் ஒருசிலவற்றில் வைணவச் சின்னங்கள் காணப்படுகின்றன. இத்தூண்கள் செஞ்சி வேங்கடரமணர் கோயிலில் இருந்து எடுத்துவரப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. திருச்சி மாவட்டம் திருமழபாடி, விழுப்புரம் மாவட்டம் மாறங்கியூர், பரனூர் ஆகிய இடங்களில் உள்ள கல்வெட்டுகளின் மூலமும், அப்பாண்டைநாதர் உலா, தோத்திரத் திரட்டு, கலியாண வாழ்த்து போன்ற நூல்களின் மூலமும் சித்தாமூர் கோயில்கள் குறித்த விவரங்களை அறிய முடியும். தமிழகத்தில் எஞ்சி நிற்கக் கூடிய ஒரே சமண மடம் எனும் பெருமையைப் பெற்றுள்ளது மேல்சித்தாமூரில் அமைந்துள்ள ஜினகாஞ்சி மடம். கி.பி.16ஆம் நூற்றாண்டில் விழுப்புரம் மாவட்டம் உப்புவேலூரைச் சேர்ந்த வீரசேனாச்சாரியார் என்பவரால் இம்மடம் தோற்றுவிக்கப்பட்டது. இது, தமிழகத்தில் உள்ள திகம்பரப் பிரிவுச் சமணர்களின் தலைமை மடமாகும்.

Period / Ruler :

கி.பி.9-ஆம் நூற்றாண்டு / முதலாம் ஆதித்த சோழன்

Inscription / Copper :

கிரந்தத்தில் அமைந்த எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் ஆலயத்தின் முகப்புப் பகுதியில் அமைந்துள்ளன.  மலைநாதர் கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் மிகவும் பழமையானது, கி.பி.888இல் பொறிக்கப்பட்ட முதலாம் ஆதித்தச் சோழனுடைய கல்வெட்டாகும். பார்சுவநாதர் கோயிலில் நாயக்கர் காலத்தில் வடிக்கப்பட்ட தமிழ், கன்னட வரிவடிவக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

Murals :

இல்லை

Sculptures :

இக்கோயிலில் ரிஷபநாதர், நேமிநாதர், பார்சுவநாதர், கோமதீசுவரர் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன.  இங்குள்ள நேமிநாதர் சிற்பம் சென்னை மயிலாப்பூரில் இருந்த சமணக் கோயிலில் இருந்து எடுத்து வரப்பட்டதாகும். 100-க்கும் அதிகமான தூண் சிற்பங்கள் இக்கோயிலில் இடம் பெற்றுள்ளன. இவை புடைப்புச் சிற்பங்களாக எழிலுற வடிக்கப்பட்டுள்ளன. தீர்த்தங்கரர்கள், இயக்கிகள், சைவக் கடவுளர், வைணவக் கடவுளர், பெண் தெய்வங்கள் மற்றும் நவக்கிரகங்கள் முதலிய சிற்பங்கள் காணப்படுகின்றன. பகவான் பார்சுவநாதர் இக்கோயிலின் மூலவர் ஆவார். கருவறையில் பார்சுவநாதரின் சிற்பம் அமைந்துள்ளது. மடத்தோடு இணைந்தவடிவில் அதன் பக்கவாட்டில் அமைந்திருக்கின்றது இந்த ஆலயம். இக்கோயிலில் இடது புறத்தில் நின்ற கோலத்தில் மாதவிக் கொடி கால்களை படர்ந்திருக்கும் வகையில் அமைக்கப்பட்ட பாகுபலி சிற்பம் உள்ளது. கோயிலின் ஒரு பக்கத்தில் இருக்கும் தனி அறையில் கருங்கற்களால் செய்யப்பட்ட சமணத் தீர்த்தங்கரர்களின் பாதச்சுவடுகள் உள்ளன. அதன் அருகில் சமண ஐயனார் காணப்படுகிறார். இங்கு ஒரு தனிப்பகுதியில் சாந்தி நாத தீர்த்தங்கரரின் சிற்பமும் உள்ளது. சாந்தி நாத தீர்த்தங்கரர் சிற்பத்தின் அடிப்பகுதியில் அவரது சின்னமாகிய மான் வடிவத்தையும் காணலாம். இக்கோயிலின் ஒரு தனிப்பகுதியில் ஜ்வாலாமாலினி இயக்கி, பத்மாவதி இயக்கி, ஸ்ரீஜினவானி அல்லது சரஸ்வதி , ஸ்ரீ கணதரர், பிரம்மதேவர் ஆகியோருக்குத் தனி சன்னிதிகளும் உள்ளன. கோயிலின் வெளிப்புறத்தில் கல் தேர் ஒன்று உள்ளது. இது தேர் போன்ற வடிவத்தை ஒத்தது. இந்தத் தேரை இழுத்து வரும் யானை வடிவம் கற்பாறையில் செய்யப்பட்டது.

Temple Structure :

மேல்சித்தாமூரில் உள்ள பார்சுவநாதர் கோயிலின் கருவறை, அர்த்த மண்டபம், முகமண்டபம், மானஸ்தம்பம் ஆகியவை கி.பி.16ஆம் நூற்றாண்டு கலைப்பாணியை கொண்டுள்ளது. எஞ்சியவை 19-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவையாகும். மண்டபங்களிலுள்ள தூண்களில் புடைப்புச் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. தற்காலக் கலைப்பணியாக கோபுரம் காணப்படுகிறது. தொடர்ந்து மானஸ்தம்பம், பலிபீடம், கொடிமரம் ஆகியன வரிசையாக அமைந்துள்ளன. முகமண்டபம், மகாமண்டபம் ஆகியன தூண்களுடன் காணப்படுகிறது. நவக்கிரகம் இங்கு அமைந்துள்ளது.

Location :

பார்சுவநாதர் கோயில்

Phone :

Website :

Email :

Temple Opening Time :

காலை 6.00-12.30 முதல் மாலை 4.30-8.30 வரை

Way :

திண்டிவனத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் மேல்சித்தாமூர் அமைந்துள்ளது.

Nearby Bus Station :

மேல்சித்தாமூர்

Nearby Railway Station :

வந்தவாசி, விழுப்புரம்

Nearby Airport :

சென்னை மீனம்பாக்கம்

Accommodation :

விழுப்புரம் விடுதிகள்
சாலை வரைபடம்
Updated Date : 07-12-2016 18:19:57 IST