முகப்பு |
மயில் (தோகை, மஞ்ஞை) |
2. குறிஞ்சி |
கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி! |
||
காமம் செப்பாது, கண்டது மொழிமோ: |
||
பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல், |
||
செறி எயிற்று, அரிவை கூந்தலின் |
||
நறியவும் உளவோ, நீ அறியும் பூவே? |
உரை | |
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்தவழி, தலைமகளை இயற்கைப் புணர்ச்சிக்கண் இடையீடுபட்டு நின்ற தலைமகன், நாணின் நீக்குதற்பொருட்டு, மெய் தொட்டுப் பயிறல் முதலாயின அவள்மாட்டு நிகழ்த்திக |
26. குறிஞ்சி |
அரும்பு அற மலர்ந்த கருங் கால் வேங்கை |
||
மேக்கு எழு பெருஞ் சினை இருந்த தோகை |
||
பூக் கொய் மகளிரின் தோன்றும் நாடன் |
||
தகாஅன் போலத் தான் தீது மொழியினும், |
||
தன் கண் கண்டது பொய்க்குவது அன்றே- |
||
தேக் கொக்கு அருந்தும் முள் எயிற்றுத்துவர் வாய் |
||
வரை ஆடு வன் பறழ்த் தந்தைக் |
||
கடுவனும் அறியும், அக் கொடியோனையே. |
உரை | |
நற்றாயும் செவிலித் தாயும் தலைமகளது வேறுபாடு கண்டு, 'இஃது எற்றினான்ஆயிற்று?' என்று கட்டுவிச்சியை வினவிக் கட்டுக் காண்கின்ற காலத்து,'தலைமகளது வேறுபாட்டிற்குக் காரணம் பிறிதோர் தெ |
38. குறிஞ்சி |
கான மஞ்ஞை அறை ஈன் முட்டை |
||
வெயில் ஆடு முசுவின் குருளை உருட்டும் |
||
குன்ற நாடன் கேண்மை என்றும் |
||
நன்றுமன் வாழி-தோழி!-உண்கண் |
||
நீரொடு ஓராங்குத் தணப்ப, |
||
உள்ளாது ஆற்றல் வல்லுவோர்க்கே. |
உரை | |
வரைவு நீட்டித்தவழித் தலைமகள் தனது ஆற்றாமை தோன்றத் தோழிக்குக் கூறியது. - கபிலர் |
105. குறிஞ்சி |
புனவன் துடவைப் பொன் போல் சிறு தினைக் |
||
கடி உண் கடவுட்கு இட்ட செழுங் குரல் |
||
அறியாது உண்ட மஞ்ஞை, ஆடுமகள் |
||
வெறி உறு வனப்பின் வெய்துற்று, நடுங்கும் |
||
சூர் மலை நாடன் கேண்மை |
||
நீர் மலி கண்ணொடு நினைப்பு ஆகின்றே. |
உரை | |
வரைவு நீட்டித்தவிடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - நக்கீரர் |
138. குறிஞ்சி |
கொன் ஊர் துஞ்சினும், யாம் துஞ்சலமே- |
||
எம் இல் அயலது ஏழில் உம்பர், |
||
மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி |
||
அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த |
||
மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே. |
உரை | |
குறி பிழைத்த தலைமகன் பிற்றை ஞான்று இரவுக்குறி வந்துழி, தோழி சிறைப்புறமாகக் கூறியது; இரவுக்குறி நேர்ந்ததூஉம் ஆம். - கொல்லன் அழிசி |
183. முல்லை |
சென்ற நாட்ட கொன்றைஅம் பசு வீ |
||
நம் போல் பசக்கும் காலை, தம் போல் |
||
சிறு தலைப் பிணையின் தீர்ந்த நெறி கோட்டு |
||
இரலை மானையும் காண்பர்கொல், நமரே?- |
||
புல்லென் காயாப் பூக் கெழு பெருஞ் சினை |
||
மென் மயில் எருத்தின் தோன்றும் |
||
புன் புல வைப்பிற் கானத்தானே. |
உரை | |
பருவ வரவின்கண், 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- ஒளவையார் |
184. நெய்தல் |
அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கு இல்லை; |
||
குறுகல் ஓம்புமின் சிறுகுடிச் செலவே- |
||
இதற்கு இது மாண்டது என்னாது, அதற்பட்டு, |
||
ஆண்டு ஒழிந்தன்றே, மாண் தகை நெஞ்சம்- |
||
மயிற்கண் அன்ன மாண் முடிப் பாவை |
||
நுண் வலைப் பரதவர் மட மகள் |
||
கண் வலைப் படூஉம் கானலானே. |
உரை | |
கழறிய பாங்கற்குக் கிழவன் உரைத்தது. - ஆரிய அரசன் யாழ்ப் பிரமதத்தன் |
194. முல்லை |
என் எனப்படுங்கொல்-தோழி! மின்னு வர |
||
வான் ஏர்பு இரங்கும் ஒன்றோ? அதன் எதிர் |
||
கான மஞ்ஞை கடிய ஏங்கும்; |
||
ஏதில கலந்த இரண்டற்கு என் |
||
பேதை நெஞ்சம் பெரு மலக்குறுமே? |
உரை | |
பருவ வரவின்கண், 'ஆற்றாளாம்', எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- கோவர்த்தனார். |
225. குறிஞ்சி |
கன்று தன் பய முலை மாந்த, முன்றில் |
||
தினை பிடி உண்ணும் பெருங் கல் நாட! |
||
கெட்ட இடத்து உவந்த உதவி கட்டில் |
||
வீறு பெற்று மறந்த மன்னன் போல, |
||
நன்றி மறந்து அமையாய் ஆயின், மென் சீர்க் |
||
கலி மயிற் கலாவத்தன்ன இவள் |
||
ஒலி மென் கூந்தல் உரியவால் நினக்கே. |
உரை | |
வரைவிடை வைத்துப் பிரிவாற்குத் தோழி சொல்லியது. - கபிலர் |
244. குறிஞ்சி |
பல்லோர் துஞ்சும் நள்ளென் யாமத்து, |
||
உரவுக் களிறுபோல் வந்து, இரவுக் கதவு முயறல் |
||
கேளேம் அல்லேம்; கேட்டனெம்-பெரும!- |
||
ஓரி முருங்கப் பீலி சாய |
||
நல் மயில் வலைப் பட்டாங்கு, யாம் |
||
உயங்குதொறும் முயங்கும், அறன் இல் யாயே. |
உரை | |
இரவுக்குறி வந்து ஒழுகாநின்ற தலைமகனைத் தாம் காவல் மிகுதியால் புறப்பட்டுஎதிர்கொள்ளப் பெறாதவழி, பிற்றை ஞான்று தோழி, 'வரைந்து கொள்ளின் அல்லது இவ்வொழுகலாற்றின் இனிக் கூடல் அ |
249. குறிஞ்சி |
இன மயில் அகவும் மரம் பயில் கானத்து, |
||
நரை முக ஊகம் பார்ப்பொடு பனிப்ப, |
||
படு மழை பொழிந்த சாரல் அவர் நாட்டுக் |
||
குன்றம் நோக்கினென்-தோழி!- |
||
பண்டையற்றோ, கண்டிசின், நுதலே? |
உரை | |
வரைவிடை வைப்ப, 'ஆற்றாகிற்றியோ?' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது - கபிலர் |
251. முல்லை |
மடவ வாழி-மஞ்ஞை மா இனம் |
||
கால மாரி பெய்தென, அதன் எதிர் |
||
ஆலலும் ஆலின; பிடவும் பூத்தன; |
||
கார் அன்று-இகுளை!-தீர்க, நின் படரே! |
||
கழிந்த மாரிக்கு ஒழிந்த பழ நீர், |
||
புது நீர் கொளீஇய, உகுத்தரும் |
||
நொதுமல் வானத்து முழங்கு குரல் கேட்டே. |
உரை | |
பிரிவிடைத் தோழி. 'பருவம் அன்று; பட்டது வம்பு' என்று வற்புறுத்தியது.- இடைக் காடன். |
264.குறிஞ்சி |
கலி மழை கெழீஇய கான் யாற்று இகுகரை, |
||
ஒலி நெடும் பீலி துயல்வர இயலி, |
||
ஆடு மயில் அகவும் நாடன் நம்மொடு |
||
நயந்தனன் கொண்ட கேண்மை |
||
பயந்தகாலும், பயப்பு ஒல்லாதே. |
உரை | |
'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்கு, தலைமகள், 'ஆற்றுவல்' என்றது. - கபிலர் |
347. பாலை |
மல்கு சுனை உலர்ந்த நல்கூர் சுரமுதல் |
||
குமரி வாகைக் கோலுடை நறு வீ |
||
மட மாத் தோகைக் குடுமியின் தோன்றும் |
||
கான நீள் இடை, தானும் நம்மொடு |
||
ஒன்று மணம் செய்தனள் இவள் எனின், |
||
நன்றே-நெஞ்சம்!-நயந்த நின் துணிவே. |
உரை | |
பொருள் வலிக்கும் நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லிச் செலவழுங்கியது.- காவிரிப் பூம் பட்டினத்துச் சேந்தன் கண்ணன் |
391. முல்லை |
உவரி ஒருத்தல் உழாஅது மடியப் |
||
புகரி புழுங்கிய புயல் நீங்கு புறவில், |
||
கடிது இடி உருமின் பாம்பு பை அவிய, |
||
இடியொடு மயங்கி இனிது வீழ்ந்தன்றே; |
||
வீழ்ந்த மா மழை தழீஇப் பிரிந்தோர் |
||
கையற வந்த பையுள் மாலை, |
||
பூஞ் சினை இருந்த போழ்கண் மஞ்ஞை |
||
தாஅம்நீர் நனந்தலை புலம்பக் |
||
கூஉம்-தோழி!-பெரும் பேதையவே! |
உரை | |
பிரிவிடை, 'பருவ வரவின்கண் ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி அழிந்து சொல்லியது. - பொன்மணியார் |