அ |
அ - அழகு |
2 - 30;
11 - 44 |
அகடு - வயிறு | 10 - 14 |
அகரு - அகில் | 12 - 5 |
அகலம் - பெருமை | 4 - 30 |
அகலம் - மார்பு | 2-31;
8 - 43 |
அகலிகை - கௌதமன் மனைவி | 19 - 50 |
அகவயல் - வயலினகம் | 7 - 27 |
அகவு - அழைக்கப்படும் | 10 - 16 |
அகவுநர் - பாடுவோர் | 15 -42 |
அகறல் - பிரிவு | 9-23 |
அகில் - ஒரு மணமரம் | 10-72 |
அங்கண் - அழகிய இடம் | 1-41 |
அங்கி - கார்த்திகை | 11-7 |
அங்கை - உள்ளங்கை | 10-76 |
அசும்பு - இடையறாதொழுகும் | 8-128;
21-52 |
அசைத்த - கட்டின | 17-3 |
அசைவரூஉம் - இயங்கும் | 8-27 |
அசைவிட - இளைப்பாற | 6-2 |
அச்சாக - அச்சமாக | 3-34 |
அச்சிரம் - முன்பனிக்காலம் | 18-38 |
அடல் - வெற்றி | 11-48 |
அடியோர் - அடியுறை மகளிர் | 8-43 |
அடுகென - வெல்க என்று | 8-108 |
அடுக்க - அடுத்து | 13-62 |
அடும் - கொல்லும் | 9-71 |
அடை - இலை | 13-50 |
அடையல் - ஒருவகைச் செருப்பு | 21-7 |
அணங்கு - அச்சம் | 1-1 |
அணங்கு - துன்பம் | 1-40 |
" - வருத்தம் | 9-2 |
அணங்கும் - வருத்தாநின்ற | 4-49 |
அணங்குற - வருத்தமுற | 9-21 |
அணத்து - உயர எடுத்து | 20-105 |
அணி - அண்மையிடம் | 10-41 |
அணிகென - அணிந்து கொள்க என்று | 8-105 |
அணிநலம் - ஒப்பனையழகு | 16-13 |
அணிமயில் - அழகிய மயில் | 5-60 |
அணை - பஞ்சணை | 7-55 |
அண்ணல் - ஆதிசேடன் (ப. தி.) | 1-80 |
அண்ணல் - முருகப்பெருமான் | 17-14 |
அண்ணால் - விளி | 13-15 |
அதர் - வழி | 6-6 |
அதிர்ப்ப - முழங்க | 8-20 |
அதிர்ப்பு - எதிரொலி | 8-24 |
அது - அக்கற்பு | 9-16 |
அத்திரி - கோவேறு கழுதை | 10-16 |
அத்திறம் - அத்தன்மை | 11-112 |
அந்தணர் அறம் - பார்ப்பனர்க்குரிய ஒழுக்கம் | 14-28 |
அந்தணன் - வியாழம் | 11-7 |
அமரர் உண்டிமதி - அமரர் உணவாகிய திங்கள் | 11-35 |
அமரர் செல்வன் - இந்திரன் | 5-51 |
அமர் - போர் | 5-2; 8-108 |
அமர்ந்ததை - எழுந்தருளிய திருப்பதி | 21-12 |
அமர்ந்து - விரும்பி | 5-63 |
அமர்ந்தோய் - எழுந்தருளியோய் | 4-71 |
அமளி - படுக்கை | 10-34 |
அமிர்தபானம் - அமிர்தம் போன்ற காமபானம் | 8-120 |
அமிர்தம் - தேவருணவு | 2-69 |
அமிர்தன - அமிர்தம் போன்ற | 12-57 |
அமிழ்தின் - அமிழ்த்ததால் | 3-15 |
அமையாப் புணர்ச்சி - விடமாட்டாத புணர்ச்சி | 5-29 |
அம்பாவாடல் - தைந்நீர் ஆடல் | 11-81 |
அம்பி - ஓடம், மரக்கலம் | 6-75; 11-17 |
அம்பினவை - அம்பினையுடையை | 15-60 |
அம்பின் தொழில்வீற்றிருந்த நகர் - சிரமச்சாலை | 18-28 |
அம்ம - அசை | 8-27 |
ப.--27