வி
விசும்பிலூழி - வானமும் கெட்ட ஊழி
விசும்பு - வானகம்
விடை - ஆட்டுக் கிடாய்
விடை - காளை (ப-தி)
விடைப்பாகன் - சிவன் (ப-தி)
விட்டெறிந்து - வீசி எறியப்பட்டு
விண்ணோர் முதல்வன் - இந்திரன்
விதலை - நடுங்குதல்
விதியாற்றான் - நூல்நெறியாலே
விதியின் மக்கள் - பன்னிரண்டு ஆதித்தரும்
விதிர்ப்புற - நடுங்க
விதிர்ப்போர் - அசைப்போர்
வித்தகம் - சதுரப்பாடு
வித்தி - சிதறி
வித்திடுபுலம் - நாற்றங்கால்
வித்துபு - விதைத்து
வியத்தகு - வியக்கத் தகுந்த
வியல் - அகன்ற
வியன்மதி - பெரிய திங்கள்
விரகியர் - காமுறுமகளிர்
விரவு நரையோர் - நரை கலந்த மயிரினையுடையோர்
விரிநூலந்தணர் - மெய்ந்நூலுணர்ந்த சான்றோர்
விருந்து அயர் - விருந்தோம்புகின்ற
விருந்துபுனல் - புதுப்புனல்
விருப்பு - அன்பு
விரை - மணப்பொருள்
விரைவு - விரைந்து
விரைமயில் - விரைந்து செல்லும் மயில்
விலங்கென - தவிர்க என்றுகூற
விழுச்சீர் - சிறந்த புகழ்
விழுத்தகை - வீறு
விழுத்தவம் - சிறந்த தவம்
விழுவார் - விரும்புவோர்
விளக்கம் - ஒளியுடைமை
விளி - கூப்பாடு
விளியா விருந்து - அழைக்கப்படாத விருந்து
விளிவின்று - இடைவிடாது
விளைக பொலிக - இங்ஙனம் கூறி
           வாழ்த்துதல் பண்டைக்காலவழக்கம்
விறல் - வெற்றி
விறல்சான்றவை - வெற்றியமைந்தனை
வினாவிறுப்போர் - விடைகூறுவோர்
வினைநந்த - தொழில்பெருக
வீ
வீ - மலர்
வீமலி - பூக்கள் மிக்க
வீழ் - விழைகின்ற
வீழ்வார் - விரும்பப்பட்டோர்
வீறு - வேறொன்றற்கில்லாத சிறப்பு
வெ
வெஃகி - விரும்பி
வெஞ்சுடர் - ஞாயிறு
வெடிபடா - வெடித்து
வெண்டுகில் - வெள்ளையாடை
வெந்நோக்கம் - வெச்சென்ற பார்வை
வெம்மை - மறம்
வெம்மை - வெப்பம்
வெய்யை - வெவ்வியை (கொடுமையுடையை)
வெய்யோன் - விரும்புவோன்
வெரிநத்தோல் - முதுகிற்றோல்
வெரிநின் - முதுகில்
வெருவுற்று - அஞ்சி
வெள்யாடு - ஒருவகையாடு
வெள்ளம் - ஒரு பேரெண்
வெள்ளி - ஒருகோள்
வெறி - வெறிப்பாட்டு
வெறிகொண்டான் - வெறியாடலை
           ஏற்றுக்கொள்ளும் முருகன்
வெறுநரையோர் - முழுதும் நரைத்தவர்
வென்வேலான் - வெற்றி வேலையுடையோன் முருகன்